NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / பாக்ஸ் ஆபீசில் கொடி கட்டும் ரஜினியின் 'வேட்டையன்'; முதல் வாரத்தில் ₹100 கோடியை தாண்டியது!
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாக்ஸ் ஆபீசில் கொடி கட்டும் ரஜினியின் 'வேட்டையன்'; முதல் வாரத்தில் ₹100 கோடியை தாண்டியது!
    முதல் வாரத்தில் ₹100 கோடியை தாண்டிய 'வேட்டையன்'

    பாக்ஸ் ஆபீசில் கொடி கட்டும் ரஜினியின் 'வேட்டையன்'; முதல் வாரத்தில் ₹100 கோடியை தாண்டியது!

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 14, 2024
    01:09 pm

    செய்தி முன்னோட்டம்

    ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் நடித்த தமிழ்த் திரைப்படமான 'வேட்டையன்', வெளியான முதல் வார இறுதியில் பாக்ஸ் ஆபிஸில் ₹100 கோடி கிளப்பை கடந்துள்ளது.

    தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் இப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியானது.

    படம் வெளியாகி நான்காவது நாளில், வேட்டையன் ₹22.25 கோடியை ஈட்டியது. இதன் மொத்த நிகர வசூல் ₹104.8 கோடியாக இருந்தது.

    இந்தியா முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஒட்டுமொத்தமாக 57.25% தமிழ் ஆக்கிரமிப்புகளையும், 32.16% தெலுங்கு ஆக்கிரமிப்புகளையும், 19.75% இந்தி ஆக்கிரமிப்பையும் படம் கண்டது.

    விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்கள் இருந்தபோதிலும், அக்டோபர் 10 ஆம் தேதி (தசரா) வெளியானதிலிருந்து படத்தின் வசூல் இரட்டை இலக்கத்தில் உள்ளது.

    திரைப்பட விவரங்கள்

    'வேட்டையன்' கதைக்களம் மற்றும் நட்சத்திர நடிகர்கள்

    'வேட்டையன்' கதைக்களத்தில், ஒரு அரசு பள்ளி ஆசிரியரால் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் வர்த்தகத்தைச் சுற்றி தொடங்குகிறது.

    இது ஒரு போலீஸ் அதிகாரி மறைக்கப்பட்ட பல ஊழல்களை வெளிக்கொணர வழிவகுக்கிறது.

    அதோடு காவல்துறை என்கவுண்டர் பற்றியும் தொட்டு செல்கிறது.

    இப்படத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர் , ஃபகத் பாசில் , ரித்திகா சிங், ராணா டகுபதி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

    அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, டி.ஜே.ஞானவேல் இயக்கியுள்ளார்.

    நான்கு நாட்களில், வேட்டையான் தமிழ்நாட்டிலிருந்து மட்டும் ₹65 கோடி உட்பட உலகம் முழுவதும் ₹160 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வேட்டையன்
    பாக்ஸ் ஆபிஸ் வசூல்
    ரஜினிகாந்த்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    வேட்டையன்

    ரஜினியின் 'வேட்டையன்' படத்தில், அமிதாப் பச்சனின் கதாபாத்திரம் இதுதான்! அமிதாப் பச்சன்
    அரசியல் கேள்விகள் என்னிடம் கேட்காதீர்கள்: ரஜினி காட்டம் ரஜினிகாந்த்
    ஹண்டர் வண்டார்: ரஜினிகாந்தின் வேட்டையனின் 2வது சிங்கிள் வெளியானது அனிருத்
    'ஹண்டர் வாண்டார் சூடுடா': ரஜினியின் 'வேட்டையன்' ப்ரீவ்யூ வீடியோ வெளியானது ரஜினிகாந்த்

    பாக்ஸ் ஆபிஸ் வசூல்

    ஹிட் ஸ்டார் கவின்: 'தாதா'வை மிஞ்சிய 'ஸ்டார்' பாக்ஸ் ஆபிஸ் வசூல் தமிழ் சினிமா
    தவறான பாக்ஸ் ஆபீஸ் தரவுகளை பரப்பியதற்காக 'கல்கி 2898 கி.பி' தயாரிப்பாளர்கள் சட்ட நடவடிக்கை பொழுதுபோக்கு
    'கல்கி' நடிகர்களின் சம்பளம்: பிரபாஸ் ₹80 கோடி, தீபிகா ₹20 கோடி  திரைப்படம்
    திரையரங்குகளில் மட்டுமல்ல, OTTயிலும் சாதித்து காட்டிய விஜய் சேதுபதியின் மகாராஜா விஜய் சேதுபதி

    ரஜினிகாந்த்

    Blacksheep RJவிக்னேஷ்காந்தின் 50 மணி நேரம் போட்காஸ்ட்டிற்கு ரஜினிகாந்த் வாழ்த்து பொழுதுபோக்கு
    ரஜினிகாந்தின் 'வேட்டையன்' படத்தின் முதல் பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது! பாடல் வெளியீடு
    'மனசிலாயோ': ரஜினிகாந்தின் 'வேட்டையன்' படத்தின் முதல் பாடல் வெளியானது பாடல் வெளியீடு
    'மனசிலாயோ'; வேட்டையன் பாணியில் ஓணம் திருவிழாவிற்கு வாழ்த்து தெரிவித்த கூலி படக்குழு ஓணம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025