
'மனசில்லையோ': வேட்டையன் முதல் பாடல் விரைவில் வெளியாகிறது
செய்தி முன்னோட்டம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 'வேட்டையன்' படத்தின் ரிலீஸ் தேதி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று யாரும் எதிர்பார்க்காத மற்றொரு அப்டேட் வெளியாகியுள்ளது.
அதன்படி படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தும், தயாரிப்பாளர் தரப்பும் உறுதி செய்துள்ளது.
'மனசில்லையோ' எனத்துவங்கும் இந்த பாடலின் வெளியிடப்படும் தேதிக்காக தற்போது ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர்.
ரஜினி, 'ஜெயிலர்' பட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் T.J.ஞானவேல் உடன் இணைந்து 'வேட்டையன்' படத்தில் நடித்துள்ளார்.
இதில், அமிதாப் பச்சன், ராணா டக்குபதி, ஃபஹத் ஃபாசில், ரித்திகா சிங், மஞ்சு வாரியார், அபிராமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை தயாரித்துள்ளது. வேட்டையன் அக்டோபர் 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Hunter dude 💥 is coming to blast your speakers! 🔊 The 1st Single from #Vettaiyan 🕶️ coming soon...! #Manasilayo ??? 🥁#வேட்டையன் 🕶️ @rajinikanth @tjgnan @anirudhofficial @SonyMusicSouth #Vettaiyan1stSingle #VettaiyanFromOct10 https://t.co/acEw3dTxf5
— Lyca Productions (@LycaProductions) August 20, 2024