ரஜினிகாந்தின் 'வேட்டையன்' ஆடியோ லான்ச் தேதி அறிவிப்பு
T.J.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள 'வேட்டையன்' அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இதில் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியார் ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் பாடலான 'மனசிலாயோ', கடந்த செப்டம்பர் 9 அன்று வெளியானது. பாடல் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தற்போது படத்தில் ஆடியோ லான்ச் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி, மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு இசையமைத்திருப்பது அனிருத். வேட்டையன் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. போலி போலீஸ் என்கவுண்டர் பற்றியது இந்த கதை என கூறப்படுகிறது.