
'ஜெயிலர் படம் சுமார் தான்..': வைரலாகும் ரஜினியின் விமர்சனம்
செய்தி முன்னோட்டம்
நேற்று ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டத்தின் போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் உரை ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அந்த வெற்றிவிழா கொண்டாட்டத்தில், 'ஜெயிலர்' திரைப்படத்தில் உழைத்த பலரையும் ரஜினிகாந்த் பாராட்டி பேசினார்.
குறிப்பாக இசையமைப்பாளர் அனிருத் குறித்து பேசும் போது, "ஜெயிலர் திரைப்படத்தை ரீ-ரெகார்டிங் செய்வதற்கு முன்னால் நான் பார்த்தேன். உடனே தயாரிப்பு நிர்வாகிகளான கண்ணன் மற்றும் செம்பியனிடம் படம் எப்படி எனக்கேட்டேன். அதற்கு கண்ணன் 'படம் சூப்பர் என்றார்' அனால் செம்பியனோ, 'படம் சுமார்' என்றார். எனக்கு கூட அப்படி தான் தோன்றியது. ஆனால் ரீரெகார்டிங் முடிவடைந்ததும் படம் வேற எங்கேயோ போய்விட்டது, 'My God '! " எனக்கூறினார்.
ரஜினிகாந்தின் இந்த விமர்சனம் தற்போது அவரின் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
வைரலாகும் ரஜினியின் விமர்சனம்
#Rajinikanth is becoming #Ilaiyaraja these days now in giving loose talks. Man!! He gave you one of the biggest BO in your career and you chose to insult him again and again???
— 🤡 (@im_sharanV) September 18, 2023
This is so unacceptable. #Jailer
Feeling so bad for #Nelson here !! pic.twitter.com/cpg0CecKAF