ரஜினியின் பர்த்டே ஸ்பெஷல்: தலைவரின் டாப் 10 பஞ்ச் டயலாக்குகள்
செய்தி முன்னோட்டம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு உலகமெங்கும் ரசிகர்கள் உள்ளனர்.
ரஜினி திரைப்படத்துறையில் நுழைந்தபோது, அவருடைய நிறத்தை பார்த்தும், அவருடைய வசன உச்சரிப்பை வைத்தும் கிண்டல் அடித்தவர்கள் முன்னாலே, தன்னுடைய தனிப்பட்ட ஸ்டைல் மற்றும் நடிப்பு திறனால் உச்சத்தை தொட்டார்.
அவர் திரைத்துறையில் தனக்கென தேர்வு செய்த பாதை கமெர்ஷியல் படங்கள்.
ரசிகர்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்து 3 மணி நேரம் தன்னை மறந்து இருக்கவேண்டும் என்பதற்காக அவர் தேர்வு செய்யும் படங்களில் ஒரு சில டெம்ப்ளட் ஐட்டங்கள் இடம்பெறும்.
அதில் ஒன்று அவரின் பஞ்ச் டயலாக்ஸ்!
ரஜினி படங்களின் பஞ்ச் டயலாக்குகளை சிறியவர் முதல் பெரியவர் வரை பேசுவது அன்றாட வழக்கமாகி போனது.
அப்படி அவருடைய படங்களில் டாப் 10 பஞ்ச் டயலாக்குகள் உங்களுக்காக!
பஞ்ச் டயலாக்குகள்
டாப் 10 பஞ்ச் டயலாக்குகள்
மகிழ்ச்சி: கபாலி படத்தில் இடம்பெற்ற இந்த வசனம் ரஜினியின் தனிப்பட்ட ஸ்டைலில் கூறியதும் அந்த வார்த்தையின் அர்த்தத்தையே மாற்றியது. பலரும் தினசரி இதனை பயன்படுத்த துவங்கினர்.
என் வழி தனி வழி: படையப்பா படத்தில் இடம்பெற்ற இந்த வசனம் பட்டிதொட்டி எங்கும் பேமஸ் ஆனது. தற்போது இதன் மாறுபட்ட வசனங்களை தான் பல நடிகர்கள் தங்கள் படங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் செய்றான்: அருணாச்சலம் படத்தில் இடம்பெற்ற இந்த வசனம், அந்த காலகட்டத்தில் இளசுகள் மத்தியில் மிகவும் பிரபலம்.
நான் ஒரு தடவ சொன்ன 100 தடவ சொன்ன மாதிரி: பாட்ஷா படத்தில் இடம்பெற்ற இந்த வசனத்தினை ரசிக்காதவர்களே இருக்க முடியாது!
embed
Twitter Post
#Kabali #KabaliTeaser #மகிழ்ச்சி #magizhchi pic.twitter.com/7UurFe4AKx— Rajinikanth Fans (@RajiniFC) May 3, 2016
embed
Twitter Post
26 Years Of The Epic Baasha 🔥 #26YearsOfBaasha@rajinikanth #Annaatthe #Eeswaran pic.twitter.com/s07W4u4PPK— Rajini STR Fans (@RajiniSTRFans) January 12, 2021
பஞ்ச் டயலாக்குகள்
டாப் 10 பஞ்ச் டயலாக்குகள்
தீ பெட்டிக்கு ரெண்டு பக்கம் உரசுனா தான் தீ புடிக்கும். ஆனா இந்த அலெக்ஸ் பாண்டியனுக்கு எந்த பக்கம் உரசுனாலும் உன்னை பிடிக்கும்: 80களின் காலகட்டத்தில் வெளியான 'மூன்று முகம்' படத்தில் இடம்பெற்றது. ரஜினி கமெர்ஷியல் பாதைக்கு திரும்ப முக்கிய காரணமாக இருந்தது இந்த படத்தின் வெற்றியே!
நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான், கைவிடமாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நெறைய குடுப்பான் ஆனா கைவிட்டுருவான்: பாட்ஷா படத்தில் இடம்பெற்ற மற்றுமோர் பஞ்ச் லைன் இது. ரகுவரனை பார்த்து ரஜினி இந்த வசனத்தை பேசும்போது தியேட்டரில் இருந்தவர்களுக்கு மெய் சிலிர்த்திருக்கும்!
பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல: சிவாஜி படத்தில் மொட்டை ரஜினியின் பஞ்ச் டயலாக்! சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும், இது படத்தின் முக்கியமான ஹயிலைட் டயலாக்.
பஞ்ச் டயலாக்குகள்
டாப் 10 பஞ்ச் டயலாக்குகள்
ஹுக்கும் டைகர் கா ஹுக்கும்: 'ஜெயிலர்' படத்தில் இடம்பெற்ற இந்த வசனம், ஓரிரு காட்சிகளில் மட்டுமே இடம்பெற்றிருந்தாலும், பாடலிலும் இடம்பெற்று படத்தின் பஞ்ச் வசனமாக மாறியது.
இது எப்படி இருக்கு?: ரஜினியின் ஆரம்பகால படங்களில் ஒன்றான '16 வயதினிலே' படத்தில் இடம்பெற்றிருந்த இந்த வசனம் படிக்கும்போது சாதாரணமாக தோன்றினாலும், ரஜினியின் ஸ்டைலில் கூறும் போது அந்த ஃபீலிங் வேற லெவல்!
நான் எப்போ வருவேன், எப்டி வருவேன்னு யாருக்கும் தெரியது. ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்ட்-ஆ வருவேன்: 'முத்து' படத்தில் இடமெபெற்றுள்ள இந்த வசனம் அவருடைய அரசியல் பிரவேசத்துக்காக எழுதப்பட்டது. ஆரம்பத்தில் இந்த வசனத்தை பேச ரஜினி யோசித்ததாகவும், டைரக்டர் ரவிக்குமார்-இன் வற்புறுத்தல் பேரில் அவர் பேச ஒப்புக்கொண்டதாகவும் செய்திகள் உண்டு.