
அரசியல் கேள்விகள் என்னிடம் கேட்காதீர்கள்: ரஜினி காட்டம்
செய்தி முன்னோட்டம்
இன்று நடைபெறவிருக்கும் 'வேட்டையன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
அவர் தற்போது 'கூலி' பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார்.
அப்போது, சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்திடம், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற தகவலைப் பற்றி செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு அவர் "என்னிடம் அரசியல் கேள்விகள் கேட்காதீர்கள்" என்று காட்டமாக பதிலளித்தார்.
பின்னர், "வேட்டையன்" படத்திற்கான கேள்விகள் வந்தபோது, இசை வெளியீட்டு விழாவில் யார் கலந்து கொள்ளும் என்று கேட்ட போது, "தெரியாது" என்றார்.
மேலும், "வேட்டையன்" மற்றும் "கூலி" படங்கள் எப்படி வந்துள்ளன என்பதற்கான கேள்விக்கு, "அனைத்தும் நன்றாக வந்துள்ளது" எனக் கூறினார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#Watch | “என்னிடம் அரசியல் கேள்வி கேட்காதீர்கள்” - நடிகர் ரஜினிகாந்த்#SunNews | #Rajinikanth | #Vettaiyan pic.twitter.com/5ITx57L0FG
— Sun News (@sunnewstamil) September 20, 2024