Loading...
கிரீஸில் பேரக்குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்ட ரஜினிகாந்த்: வைரலாகும் புகைப்படங்கள்
கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் பேரன்களுடன் ரஜினிகாந்த் மகிழ்ச்சியாகச் செலவிட்ட புகைப்படங்கள்.

கிரீஸில் பேரக்குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்ட ரஜினிகாந்த்: வைரலாகும் புகைப்படங்கள்

எழுதியவர் Vasuki
Nov 18, 2026
07:19 pm

செய்தி முன்னோட்டம்

வெள்ளித்திரையில் தனது பிரம்மாண்ட நடிப்பாலும் தனித்துவமான ஸ்டைலாலும் கோடிக்கணக்கான ரசிகர்களை கட்டிப்போட்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் தனது குடும்பத்தினர் மற்றும் பேரன்களுடன் மிகுந்த உற்சாகமாக ஓய்வெடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் காவ்யா மாறன் ஆகியோரின் திருமணக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக அண்மையில் கிரீஸிற்கு சென்ற ரஜினிகாந்த், திருமண நிகழ்வுகளைத் தொடர்ந்து தனது குடும்பத்தினருடன் ஏதென்ஸ் நகரில் நேரம் செலவிட்டார். எளிமையான உடையில், மிகவும் புத்துணர்ச்சியுடனும் மகிழ்ச்சியுடனும் பேரன்களுடன் ரஜினிகாந்த் நடந்து செல்லும் தருணங்கள் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்துள்ளன.

நெகிழ்ச்சி பதிவு

மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் பகிர்ந்த நெகிழ்ச்சிப் பதிவு

இந்த குடும்ப சுற்றுலாவின் இனிய தருணங்களை சூப்பர் ஸ்டாரின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்தப் புகைப்படங்களுடன், "ஏதென்ஸ் நகரில் எவ்வளவு அற்புதமான நினைவுகளை உருவாக்கியுள்ளோம்! இந்த இனிய குடும்பச் சுற்றுலாவின் ஒவ்வொரு நொடியையும் முழுமையாக ரசித்து அனுபவிக்கிறோம்" என சௌந்தர்யா நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

சௌந்தர்யா பகிர்ந்த இந்தப் புகைப்படங்கள் வெளியான சில நிமிடங்களிலேயே இணையத்தில் லைக்குகளையும் பகிர்வுகளையும் குவித்து டிரெண்டாகி வருகின்றன.

திருமண கொண்டாட்டங்கள் முடிவடைந்து அனிருத்தும், காவியா மாறனும் சில தினங்களுக்கு முன் சென்னை வந்தடைந்த நிலையில், ரஜினிகாந்த் மற்றும் குடும்பத்தினர் இன்று சென்னை திரும்பினர்.

ADVERTISEMENT