
லோகேஷ் கனகராஜின் 'கூலி' படத்திற்காக ரஜினிகாந்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
செய்தி முன்னோட்டம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படமான 'கூலி', ஆகஸ்ட் 14, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம், ₹400 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
ஆனால், பட்ஜெட்டை விட, அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருப்பது அதன் நடிகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாயை பிளக்கவைக்கும் சம்பள தொகைதான்.
வருவாய்
'கூலி' படத்திற்கு இதுவரை வாங்காத உச்சபட்ச சம்பளத்தை பெற்றுள்ளார் ரஜினிகாந்த்?
நியூஸ்18 படி, ரஜினி, கூலி படத்தில் தனது பாத்திரத்திற்காக ₹260 கோடி முதல் ₹280 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளார்.
இந்த தொகை மற்ற ஆசிய சூப்பர் ஸ்டார்களான அமிர் கான் மற்றும் ஜாக்கி சான் ஆகியோரின் வருவாயை விட அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், படத்தை இயக்குவதற்காக லோகேஷ் கனகராஜின் சம்பளமும் அதிகரித்துள்ளது, அவருக்கு ₹60 கோடி சம்பளம் வழங்கப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூலி படத்தில் நடிக்கும் மூத்த நடிகர் நாகார்ஜுனா அக்கினேனி தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் சைமனாக நடிக்க அவர் தற்போது ₹24 கோடி வாங்குகிறார்.
கேமியோக்கள்
'கூலி' படத்தில் சிறப்பு தோற்றங்களும் அவர்களின் சம்பளமும்
ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் மற்றும் கன்னட நடிகர் உபேந்திரா போன்ற பிற நடிகர்கள் தங்கள் கட்டணத்தை உயர்த்தவில்லை.
மேலும் இந்த மெகா திட்டத்தில் நடிக்க அவர்களின் வழக்கமான சம்பள தொகையையே பெறுவதாகக் கூறப்படுகிறது. கூலி படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் அமீர் கான், தனது தோற்றத்திற்காக ₹25 கோடி முதல் ₹30 கோடி வரை சம்பளம் வாங்குவதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், நடிகை பூஜா ஹெக்டே கூலி படத்திற்கான ஒரு பாடலில் ஒரு சிறப்பு தோற்றத்தில் தோன்றுவார். அவர் ₹2 கோடி சம்பளம் வாங்குவதாக செய்திகள் கூறுகின்றன.