Page Loader
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளுக்கு ரஜினிகாந்த் உள்ளிட்ட தமிழ் சினிமா நட்சத்திரங்கள் வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளுக்கு ரஜினிகாந்த் உள்ளிட்ட தமிழ் சினிமா நட்சத்திரங்கள் வாழ்த்து

எழுதியவர் Sekar Chinnappan
Sep 17, 2024
03:17 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 17) தனது 74வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முதல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ரஜினிகாந்த், "நமது மரியாதைக்குரிய மாண்புமிகு பிரதமர் அன்புள்ள திரு நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் எப்போதும் நல்ல ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார். இதேபோல், நடிகருமான விஜயும் எக்ஸ் பக்கத்தில், "மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு இதயப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுளுக்காக நான் பிரார்த்திக்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

நடிகர் ரஜினிகாந்தின் எக்ஸ் பதிவு

ட்விட்டர் அஞ்சல்

நடிகர் விஜயின் எக்ஸ் பதிவு