NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / சூப்பர்ஸ்டார் பர்த்டே ஸ்பெஷல்: சினிமாத்துறையில் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர்கள் இவர்கள் தான்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    சூப்பர்ஸ்டார் பர்த்டே ஸ்பெஷல்: சினிமாத்துறையில் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர்கள் இவர்கள் தான்!
    ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர்கள் இவர்கள் தான்

    சூப்பர்ஸ்டார் பர்த்டே ஸ்பெஷல்: சினிமாத்துறையில் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர்கள் இவர்கள் தான்!

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 08, 2024
    09:12 am

    செய்தி முன்னோட்டம்

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் ஈகோ இல்லாமல் மொழிகள் தாண்டி கோலிவுட், சாண்டல்வுட், பாலிவுட் என இந்தியாவின் அனைத்து படவுலகில் நெருங்கிய நண்பர்களை பெற்றுள்ளார்.

    இன்றளவும் அவர்களில் வீட்டில் நடக்கும் அனைத்து விசேஷங்களுக்கும் ரஜினி குடும்பத்தினருடன் தவறாது கலந்துகொள்வார்.

    அப்படி ரஜினியின் நெருங்கிய நண்பர்களாக இருக்கும் மற்ற மொழி நடிகர்கள் பற்றி ஒரு சிறு பார்வை இதோ உங்களுக்காக:

    தமிழ்

    ரஜினி- கமல் நட்பு பற்றி அறியாதவர்களே இருக்க முடியாது!

    ரஜினியும், கமலும் தங்கள் நட்பினால் நம்மை ஆச்சரியப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

    ஒரே துறையில் வாழும் இரு பெரும் ஜாம்பவான்கள், ஈகோ எதுவும் இல்லாமல், தனிப்பட்ட வாழ்க்கையிலும், பொது வெளியிலும் தங்கள் நட்பை வெளிக்காட்ட தவறியதே இல்லை.

    இரு நடிகர்களின் ரசிகர்கள் ஆரம்பகாலத்தில் இது புரியாமல் தங்களுக்குள் மோதிக்கொண்டாலும், இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக நிற்க தவறியதே இல்லை.

    எந்த சூழலிலும், இருவரும் ஒருவொருக்கொருவர் துணையாக நின்றுள்ளனர்.

    தெலுங்கு

    தெலுங்கு படவுலகில் ரஜினியின் நண்பர்கள்

    மோகன் பாபு: நடிகர் ரஜினியும், மோகன் பாபுவும் தொழில் வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே நண்பர்கள்.

    ஒருமுறை மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு, இருவரின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளதோடு, சூப்பர் ஸ்டாராக இருந்தும் அவர்கள் எப்படி நட்பாக இருக்கிறார்கள் என்று எழுதிய பதிவு வைரலாக சென்றது.

    இவர்கள் இருவரும் இணைந்து, தர்ம யுத்தம், பெத்தராயுடு, அன்னை ஒரு ஆலயம் போன்ற படங்களில் நடித்துள்ளனர்.

    பாலகிருஷ்ணா: பழம்பெரும் நடிகரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான NTR-இன் மகனான பாலகிருஷ்ணாவுடனும் நல்ல நட்பை பாராட்டி வருகிறார் ரஜினி.

    ரஜினிகாந்த், பாலகிருஷ்ணாவை தனது அன்பான சகோதரர் என்றே அழைக்கிறார்.

    பாலகிருஷ்ணா திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த போதும், என்.டி.ஆர்-இன் நூற்றாண்டு விழா உட்பட குடும்பநிகழ்ச்சிகள் அனைத்திலும் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார்.

    கன்னடா

    உச்ச நடிகர்களுடன் நல்ல நட்பை பேணிய ரஜினி

    அம்பரீஷ்: இருவரும் திரைத்துறையில் நுழைந்த காலத்திலிருந்தே நண்பர்களாக இருந்தனர். அம்பரீஷின் 60வது பிறந்தநாள் விழாவில் பேசிய ரஜினி, 'ஜலீலா' என்ற படத்திலிருந்து தான் சிகரெட் பிடிக்கும் கலையை கற்றுக்கொண்டதையும் வெளிப்படுத்தினார். மேலும் அவர் அடிக்கடி அம்பரீஷின் வீட்டிற்கு செல்வதையும் கூறினார். இருவரும் கன்னடம்-தமிழ் இருமொழிப் படமான ப்ரியாவில் இணைந்து நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    விஷ்ணுவர்தன்: மரியாதை கலந்த இந்த நட்பு குறித்தும் ரஜினி பல இடங்களில் தெரிவித்துள்ளார். "ஒருமுறை கன்னடம் மற்றும் தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. எதைத் தேர்ந்தெடுப்பது என்பதில் குழப்பமாக இருந்தேன். விஷ்ணு சாரிடம் கேட்டபோது, ​​இந்தப் படத்தை கே.பாலசந்தர் இயக்குவதால், தமிழ்ப்படத்தை எடுக்கும்படி அறிவுறுத்தினார். "நம்ம பையன்" தமிழ் படத்தில் நடிப்பது கன்னடர்களுக்கு பெருமை என்றும் கூறினார்"

    மலையாளம் மற்றும் ஹிந்தி

    அமிதாப் பச்சன், மோகன்லால் மற்றும் மம்மூட்டி உடனான நட்பு

    அமிதாப் பச்சன்:நடிகர் அமிதாப் உடன் மரியாதை கலந்த நட்பு உள்ளது என்பதை இருவரும் பல இடங்களில் கூறியுள்ளனர்.

    தனிப்பட்ட நட்பை தாண்டி இருவரும் குடும்ப நண்பர்களாக உள்ளனர். அமிதாப்பின் எல்லா சாதனைகள், கொண்டாட்டங்கள் ஆகியவற்றில் ரஜினியும், அவர் குடும்பத்தாரும் தவறாமல் கலந்துகொண்டுள்ளனர்.

    சமீபத்தில் ரஜினிக்காக,'வேட்டையன்' படத்தில் அமிதாப் நடிக்க ஒப்புக்கொண்டதும் கூட இந்த நட்பின் காரணமாகவே!

    மோகன்லால்-மம்மூட்டி:மலையாள படவுலகில் இந்த சீனியர் நடிகர்களுடன் ரஜினி எப்போதும் தொழில்முறை தாண்டிய நட்பை பேணி வருகிறார். மம்மூட்டியுடன் 'தளபதி' திரைப்படத்தில் நடிக்கும் முன்னரே நட்பு கொண்டிருந்ததாக ரஜினி பல இடங்களில் தெரிவித்துள்ளார்.

    அதேபோல மோகன்லால் உடனும் ரஜினி தனிப்பட்ட பிரியத்தை கொண்டுள்ளார். அதன் காரணமாகவே 'ஜெயிலர்' படத்தில் மோகன்லால் நடிக்க சம்மதித்தார் என செய்திகள் கூறுகின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரஜினிகாந்த்
    நண்பர்கள்
    நண்பர்கள் தினம்
    பிறந்தநாள்

    சமீபத்திய

    மே 17இல் தொடங்குகிறது ஐபிஎல் 2025; ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி; ஜூன் 3இல் ஃபைனல் ஐபிஎல் 2025
    IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான் ஆபரேஷன் சிந்தூர்
    கூகுள் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதி யுபிஐ
    இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் பிரதமர் மோடி

    ரஜினிகாந்த்

    எல்லாப் புகழும் தினேஷ் மாஸ்டருக்கே; மனசிலாயோ பாட்டின் வெற்றி குறித்து ரஜினிகாந்த் பேச்சு வேட்டையன்
    ரஜினியின் 'வேட்டையன்': அமெரிக்க பிரீமியர் டே விற்பனையில் ₹80லட்சம் வசூல் திரைப்பட வெளியீடு
    நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி: இன்று இதயவியல் பரிசோதனை மருத்துவமனை
    ரஜினிகாந்த் 2 நாட்களில் வீடு திரும்புவார்; வெளியான மருத்துவ அறிக்கை அப்பல்லோ

    நண்பர்கள்

    நண்பர்கள் தினம்: வாரம் முழுவதுமான கொண்டாட்டங்களுக்கான ஒரு 'Glance' நண்பர்கள் தினம்
    நண்பர்கள் தினம் 2023 : வரலாறு மற்றும் முக்கியத்துவம் நண்பர்கள் தினம்
    நண்பர்களுடன் கண்டிப்பாக செல்ல வேண்டிய குறைந்த பட்ஜெட் சுற்றுலா தலங்கள்  நண்பர்கள் தினம்
    நண்பர்கள் தினம்: நண்பர்களுடன் சேர்ந்து விளையாட சில சாகச விளையாட்டுகள் நண்பர்கள் தினம்

    நண்பர்கள் தினம்

    காலத்தின் ஓட்டத்தில் மாறும் நட்பின் படிநிலைகள் நட்பு
    நண்பர்கள் தினம் : நட்பின் இலக்கணமாக வரலாற்றில் இடம்பெற்ற நட்புகள் நட்பு
    நட்பைப் புதுப்பிப்பதும் ஒரு சுகானுபவமே! நட்பு
    உங்கள் நண்பர்களுக்கு பரிசளிக்க கூடிய சில சூப்பர் கிஃப்ட்ஸ் நண்பர்கள்

    பிறந்தநாள்

    Happy Birthday Virat Kohli : சேஸ் மாஸ்டரின் பலரும் அறியாத சில கிரிக்கெட் புள்ளிவிவரங்கள் விராட் கோலி
    உலக நாயகன் பிறந்தநாள்- சினிமாவில் அவர் புகுத்திய புதுமைகளின் ஒரு தொகுப்பு சினிமா
    கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு 'கல்கி 2898 கிபி' படத்தின் போஸ்டரை வெளியிட்ட படக்குழு கமல்ஹாசன்
    கணவர் அசோக் செல்வனுக்கு ஸ்வீட்டாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த கீர்த்தி பாண்டியன்  நடிகர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025