'ஹே சூப்பர்ஸ்டாரு டா': வேட்டையன் படத்தின் செகண்ட் சிங்கிள் ப்ரோமோ வெளியானது
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 'ஜெய் பீம்' பட இயக்குநர் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். 'ஜெயிலர்' படத்தின் வெற்றியினைத்தொடர்ந்து ரஜினி நடிக்கும் படம் இது. வரும் அக்டோபர் 10 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது. 'வேட்டைன்' திரைப்படத்தில் ரஜினிகாந்துடன், ஃபகத் பாசில், ராணா டகுபதி ஆகியோரும் படம் முழுக்க நடித்துள்ளனர். மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடித்துள்ளார். மேலும் துஷாரா விஜயன், ரித்திகா சிங், அபிராமி, ரக்ஷன் உள்படப் பலரும் நடித்துள்ளார்கள். படத்தின் முதல் பாடலான 'மனசிலாயோ' சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. இந்த நிலையில் 'ஹே சூப்பர்ஸ்டாரு டா' எனத்தொடங்கும் அடுத்த பாடல், நாளை, செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகிறது என அனிருத் அறிவித்துள்ளார்.