
'ஜிகர்தண்டா டபுள் X' வெற்றி அளித்த நம்பிக்கை; மீண்டும் 'காஞ்சனா'-வை கையிலெடுக்கும் ராகவா லாரன்ஸ்
செய்தி முன்னோட்டம்
நடிகர் ராகவா லாரன்ஸ், முனி, காஞ்சனா, காஞ்சனா 2 மற்றும் காஞ்சனா 3 என தொடர்ச்சியாக பேய் படங்களை இயக்கி நடித்து வந்தார்.
அப்படங்களும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தந்தன. எனினும், பேய் படங்களை மட்டும் எடுத்து வருகிறார் என்ற எதிர்மறை விமர்சனங்களும் வந்து கொண்டிருந்தன.
இந்த நிலையில் தான், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், SJ சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா 2 டபுள் X திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.
அதில் ராகவா லாரன்ஸின் நடிப்பும் பலரால் பாராட்டப்பட்டது. இந்த வெற்றி தந்த நம்பிக்கையில் தற்போது மீண்டும் 'காஞ்சனா 4' திரைப்படம் மூலம் இயக்குநராகிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் செப்டம்பர் மாதம் துவங்கும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
'காஞ்சனா 4' படப்பிடிப்பு
Raghava Lawrance’s #Kanchana4 🔥 pic.twitter.com/YYzxNT9gD8
— Christopher Kanagaraj (@Chrissuccess) June 6, 2024