Page Loader
கிரிக்கெட் வீரர் கங்குலி வாழ்க்கை படத்தில் நடிக்கிறாரா ரன்பீர் கபூர்?
படமாகும் கிரிக்கெட் வீரர் கங்குலியின் வாழ்க்கை

கிரிக்கெட் வீரர் கங்குலி வாழ்க்கை படத்தில் நடிக்கிறாரா ரன்பீர் கபூர்?

எழுதியவர் Venkatalakshmi V
Feb 25, 2023
05:35 pm

செய்தி முன்னோட்டம்

ஹிந்தி படவுலகில் பிரபல இளம் நடிகர் ரன்பீர் கபூர். இவர் பழம்பெரும் நடிகர் ராஜ்கபூர் வீட்டின் வாரிசு. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவர், 'பிரம்மாஸ்திரா' என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர். இவரை, கிரிக்கெட் வீரர் கங்குலியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில், கங்குலி வேடத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களாக இது பற்றிய செய்திகள் ஊடகத்தில் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இருப்பினும், இது குறித்து, நடிகர் தரப்பிலோ, தயாரிப்பாளர் தரப்பிலோ, எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வரவில்லை. படத்தின் ஆரம்ப கட்ட வேலைகளில் உள்ளதால், இன்னமும் நடிகர்களை முடிவு செய்யவில்லை என்றும், ரன்பீர் கபூர் இன்னும் சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் செய்திகள் கூறுகின்றன.

வாழ்க்கை படம்

படமாக வெளி வந்த விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை

இதற்கு முன்னர், கிரிக்கெட் வீரர் தோனியினுடைய வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்பட்டது. இந்த படத்தில் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் நடித்திருந்தார். அதே போல, இந்தியா கிரிக்கெட்டின் கடவுளாக பார்க்கப்படும் டெண்டுல்கர் வாழ்க்கை பற்றிய ஒரு ஆவண படமும் வெளியாகி உள்ளது. பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனான மித்தாலி ராஜின் படம் சென்ற ஆண்டு வெளியானது. இந்த படத்தில் தாப்ஸி பன்னு, மித்தாலி வேடத்தில் நடித்திருந்தார். அதே போல, பூப்பந்து வீராங்கனையான சாய்னா நேவால் பற்றிய படம், குத்துசண்டை வீராங்கனையான மேரி கோம் பற்றியும் படங்கள் வெளியாகி உள்ளன. தற்போது, இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி பற்றிய படமும் வெளியாக போகிறது.