LOADING...
இன்னும் 200 நாட்களில் அல்லு அர்ஜுன் 'புஷ்பா 2: தி ரூல்' வெளியாகிறது 
மூன்று வருட இடைவேளைக்கு பிறகு வெளியாகவுள்ள அல்லு அர்ஜுன் திரைப்படம், புஷ்பா 2: தி ரூல்

இன்னும் 200 நாட்களில் அல்லு அர்ஜுன் 'புஷ்பா 2: தி ரூல்' வெளியாகிறது 

எழுதியவர் Venkatalakshmi V
Jan 29, 2024
01:11 pm

செய்தி முன்னோட்டம்

அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2: தி ரூல்' திரைப்படம் தாமதமாகிறது என்ற யூகங்களுக்கு மத்தியில், தயாரிப்பாளர்கள் இன்று ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதன்படி இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி, திட்டமிட்டபடி வெளிவரும் என்று மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர். சுகுமார் இயக்கத்தில், இப்படத்தில், ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் ஃபாசில் ஆகியோரும் நடித்துள்ளனர். மூன்று வருட இடைவேளைக்கு பிறகு வெளியாகவுள்ள அல்லு அர்ஜுன் திரைப்படம் இதுவாகும். இந்த படத்தில் அல்லு அர்ஜுன் செம்மர கடத்தல்காரர் வேடத்தில் நடித்துள்ளார். படத்திற்கு இசையமைத்துள்ளது தேவி ஸ்ரீ பிரசாத். இவர் முன்னதாக இந்த படத்தின் முதல் பாகத்திற்கு இசையமைத்ததற்கு தேசிய விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்காக அல்லு அர்ஜுனும் தேசிய விருது வென்றார்.

ட்விட்டர் அஞ்சல்

புஷ்பா 2 வெளியீட்டு தேதி அறிவிப்பு