
Project-K படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் தேதி
செய்தி முன்னோட்டம்
தெலுங்கு திரையுலகில் மிக பிரம்மாண்டமாக நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்து வரும் படம் 'ப்ராஜெக்ட் கே'.
இப்படத்தின் நாயகியாக தீபிகா படுகோன் நடித்துவரும் நிலையில், பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் அவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அதனையடுத்து கூடுதல் சிறப்பாக இப்படத்தில் பிரபாஸிற்கு வில்லனாக நடிகர் கமல்ஹாசன் நடிக்கவுள்ளார் என்னும் தகவல் வெளியான நிலையில் ரசிகர்களுக்கு இப்படத்தின் மீதான ஆர்வம் மேலும் அதிகரித்துள்ளது.
இதனிடையே அண்மையில் அமெரிக்கா சாண்டியாகோவில் நடக்கவுள்ள 'காமிக் கான்'என்னும் நிகழ்ச்சியில் இப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பவுள்ளதாக படக்குழு தெரிவித்திருந்தது.
அதன்படி, அந்த க்ளிம்ப்ஸ் வீடியோ, வரும் ஜூலை 21ம்தேதி வெளியாகவுள்ளது என்று படக்குழு தற்போது தெரிவித்துள்ளது.
மேலும் இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றும் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
புதிய போஸ்டர் வெளியீடு
#CinemaUpdate | பிரபாஸ், கமல்ஹாசன் உள்ளிட்டோர் நடிக்கும் 'Project-K' திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டது படக்குழு - ஜூலை 21ம் தேதி Glimpse வீடியோ வெளியாகவுள்ளது!#SunNews | #ProjectK | #Prabhas | @ikamalhaasan pic.twitter.com/cRhHEcWIhW
— Sun News (@sunnewstamil) July 19, 2023