Page Loader
அமெரிக்காவில் வெளியாகும் 'Project-K' படம் குறித்த அப்டேட்ஸ் 
அமெரிக்காவில் வெளியாகும் ப்ராஜெக்ட் கே படம் குறித்த அப்டேட்ஸ்

அமெரிக்காவில் வெளியாகும் 'Project-K' படம் குறித்த அப்டேட்ஸ் 

எழுதியவர் Nivetha P
Jul 07, 2023
01:53 pm

செய்தி முன்னோட்டம்

தெலுங்கு திரையுலகில் மிக பிரம்மாண்டமாக நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்துவரும் படம் தான் 'Project-K'. இப்படத்தில் பிரபாஸ் ஜோடியாக தீபிகா படுகோன் நடித்து வரும் நிலையில், பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் அவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியானது. அதனையடுத்து கூடுதல் சிறப்பாக இப்படத்தில், பிரபாஸிற்கு வில்லனாக கமல்ஹாசன் நடிக்கவுள்ளார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் எடுக்கப்படும் இப்படம் குறித்த ஓர் ருசிகர அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அமெரிக்கா சாண்டியாகோவில் நடக்கவுள்ள'காமிக் கான்' (Comic con) என்னும் நிகழ்ச்சியில் இப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இவ்வீடியோவில் படத்தின் டீஸர், ட்ரைலர், டைட்டில், ரிலீஸ் தேதி உள்ளிட்டவைகள் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

ப்ராஜெக்ட் கே படத்தின் அப்டேட்