Page Loader
எஸ்.எஸ்.ராஜமௌலி, மகேஷ் பாபுவின் SSMB 29-இல் நாயகியாக நடிக்கிறார் பிரியங்கா சோப்ரா
மகேஷ் பாபுவின் SSMB 29-இல் நாயகியாக நடிக்கிறார் பிரியங்கா சோப்ரா

எஸ்.எஸ்.ராஜமௌலி, மகேஷ் பாபுவின் SSMB 29-இல் நாயகியாக நடிக்கிறார் பிரியங்கா சோப்ரா

எழுதியவர் Venkatalakshmi V
Mar 01, 2025
07:14 pm

செய்தி முன்னோட்டம்

மகேஷ் பாபு- இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான SSMB 29 மூலம் நடிகை பிரியங்கா சோப்ரா இந்திய சினிமாவில் மீண்டும் நடிக்கவுள்ளதாக வதந்தி பரவி வந்தது. இது குறித்து பிரியங்கா சோப்ரா அவ்வப்போது தனது ரசிகர்களுக்கு பல குறிப்புகளை அளித்துள்ள நிலையில், தற்போது அவரது தாயார் மது சோப்ரா, இறுதியாக லெஹ்ரன் ரெட்ரோவுக்கு அளித்த பேட்டியில் இந்த ஊகங்களுக்கு பதிலளித்துள்ளார். பேட்டியின் போது, பிரியங்கா SSMB 29 இல் நடிப்பது குறித்து கேட்கப்பட்ட போது, ​​மது சோப்ரா,"அவர் படத்தின் படப்பிடிப்பில் உள்ளார் என்று கூறினார். பிரியங்கா தற்போது படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் இருக்கிறாரா என நேர்காணல் செய்தவர் குறிப்பிட்டு கேட்டபோது, ​​அவர் ஆமோதித்தார்.

விவரங்கள்

SSMB 29 பற்றி இதுவரை அறிந்தது

SSMB 29 படத்தின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. ராஜமௌலியின் தந்தையும் எழுத்தாளருமான விஜயேந்திர பிரசாத் கதையை எழுதியுள்ளார். மேலும் இந்த படம் இந்தியானா ஜோன்ஸ் போன்ற ஒரு அதிரடி-சாகசப் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது ஜனவரி மாதம் ஹைதராபாத்தில் பூஜை விழாவுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. இருப்பினும், மகேஷ் பாபுவின் தோற்றத்தை ரகசியமாக வைத்திருக்க, தயாரிப்பாளர்கள் நிகழ்வின் எந்த படங்களையும் வெளியிடவில்லை.