இயக்குனர் ஹரி- விஷால் திரைப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானிஷங்கர்
நடிகர் விஷால், இயக்குனர் ஹரியுடன், தனது 34வது படத்திற்கு இணைகிறார் என ஏற்கனவே தெரிவித்திருந்தோம். தற்போது விஷால், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், 'மார்க் ஆண்டனி' என்னும் படத்தில் நடித்துத் முடித்துள்ளார். இப்படம் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. இப்படத்தின் முதல் பாடல், T ராஜேந்தர் குரலில், GV பிரகாஷ் இசையில், சமீபத்தில் வெளியானது. இதனை தொடர்ந்து அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டார் விஷால். ஹரி இயக்கவிருக்கும் இந்த படத்தை, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன்பென்ச் பிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, படத்தின் நாயகியாக பிரியா பவானிஷங்கர் நடிக்கிறார் என படக்குழு தற்போது அறிவித்துள்ளது.