NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / இயக்குநர் ஹரி-இசைமைப்பாளர் DSP கூட்டணியில் நடிகர் விஷாலின் 34வது படம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இயக்குநர் ஹரி-இசைமைப்பாளர் DSP கூட்டணியில் நடிகர் விஷாலின் 34வது படம்
    நடிகர் விஷாலின் 34வது படத்தில் இணையும் பிரபல இசையமைப்பாளர்

    இயக்குநர் ஹரி-இசைமைப்பாளர் DSP கூட்டணியில் நடிகர் விஷாலின் 34வது படம்

    எழுதியவர் Nivetha P
    Jul 15, 2023
    03:50 pm

    செய்தி முன்னோட்டம்

    நடிகர் விஷால் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'மார்க் ஆண்டனி' என்னும் படத்தில் நடித்துத் முடித்துள்ளார்.

    இப்படம் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    இப்படத்தில் எஸ்.ஜெ.சூர்யா, செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    இதனையடுத்து நடிகர் விஷால் தனது 34வது படத்தினை இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்று அண்மையில் தகவல்கள் வெளியானது.

    இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன்பென்ச் பிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தினை தயாரிக்கவுள்ளனர்.

    இந்நிலையில் இப்படத்தின் புதிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

    அதன்படி இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் அவர்கள் இசையமைக்கவுள்ளார் என்பதனை இப்படக்குழு போஸ்டர் மூலம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    நடிகர் விஷாலின் 34வது படம் குறித்த அப்டேட் 

    Hit the drums 🥁 Elated to have the Rockstar @ThisisDSP on board #Vishal34 - get ready for some exciting music coming your way!#DSPjoinsVishal34 #ProductionNo14 @VishalKOfficial #Hari @ZeeStudiosSouth @karthiksubbaraj @kaarthekeyens @alankar_pandian @Kirubakaran_AKR @onlynikil pic.twitter.com/L3EsR4ZhXO

    — Stone Bench (@stonebenchers) July 14, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இசையமைப்பாளர்

    சமீபத்திய

    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு

    இசையமைப்பாளர்

    பாராட்டுகளை அள்ளும் விஜய் ஆண்டனியின் உன்னத செயல்! கோலிவுட்
    'கண்ணே கலைமானே' இசை ஞானி இளையராஜாவின் 81வது பிறந்த நாள்!  பிறந்தநாள்
    GV பிரகாஷ் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியானது 'கள்வன்' பட போஸ்டர்  பிறந்தநாள்
    MSV இசையில் கண்ணதாசன் எழுதிய சிறந்த 'எவர்க்ரீன்' பாடல்கள் கோலிவுட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025