Page Loader
ஜெயிலர் ஃபீவர்: ஊழியர்களுக்கு இலவசமாக ஜெயிலர் பட டிக்கெட்ஸ் அளிக்கும் நிறுவனங்கள்
வரும் 10-ஆம் தேதி, 'ஜெயிலர்' திரைப்படம், திரைக்கு வரவிருக்கிறது

ஜெயிலர் ஃபீவர்: ஊழியர்களுக்கு இலவசமாக ஜெயிலர் பட டிக்கெட்ஸ் அளிக்கும் நிறுவனங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 08, 2023
03:32 pm

செய்தி முன்னோட்டம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் படம் வெளிவருகிறது என்றாலே, தமிழ் சினிமா ரசிகனுக்கு அன்றைக்கு திருவிழா தான். அவர் நடிப்பில், தற்போது 'ஜெயிலர்' திரைப்படம் வெளியாகவுள்ளது. வரும் 10-ஆம் தேதி, இந்த திரைப்படம், திரைக்கு வரவிருக்கிறது. அவரின் படத்தை, முதல் நாள் முதல் காட்சி பார்க்க வேண்டும் என பலரும் தியேட்டர் வாசலிலும், இணையதளத்திலும் நேற்று பழியாக கிடந்தனர். ஆனாலும், டிக்கெட்ஸ் புக்கிங் துவங்கிய சில நொடிகளில் அனைத்து டிக்கெட்டுகளை விற்று தீர்ந்தன என்றும், 'Book my show ' போன்ற டிக்கெட் புக்கிங் இணையதளத்தில் வரலாறு காணாத டிக்கெட் புக்கிங் வசூல் என அறிவிக்கப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.

card 2

இலவச டிக்கெட்டும், விடுமுறையும் அறிவிக்கும் தனியார் நிறுவனங்கள்

ரஜினிகாந்தின், ஜெயிலர் திரைப்படம் பல மொழிகளில் வெளியாகவுள்ளது. தமிழகத்தில், காலை முதல்-ஷோ தடைவிதிக்கப்பட்டதை அடுத்து, பலரும், அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திராவிற்கு சென்று, அங்கே முதல் காட்சியை காணவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இதன் தொடர்ச்சியாக ஒரு சில தனியார் நிறுவனங்கள், "சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வெளியாவதையொட்டி, மனிதவளத் துறைக்கு குவியும் விடுப்புக் கோரிக்கையைத் தவிர்க்கும் முயற்சியாக ஆகஸ்ட் 10, 2023 அன்று விடுமுறை அறிவிக்க முடிவு செய்துள்ளோம்" என்று அறிவித்துள்ள பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இது மட்டுமின்றி ஒருசில நிறுவனங்கள், ஊழியர்களுக்கு இலவச டிக்கெட்ஸ்சும் வாங்கி தந்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

ஜெயிலர் ஃபீவர்!