
கேப்டன் விஜயகாந்த் எங்கள் குடும்ப சொத்து அல்ல, மக்கள் சொத்து; பிரேமலதா விஜயகாந்த் நெகிழ்ச்சி
செய்தி முன்னோட்டம்
இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் மற்றும் ஹரீஷ் கல்யாண் முதன்மை வேடங்களில் நடித்துள்ள லப்பர் பந்து திரைப்படம் கடந்த செப்டம்பர் 20 அன்று திரைக்கு வந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த படத்தில் நிறைய இடங்களில் கேப்டன் விஜயகாந்தை நினைவுகூரும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், பிரேமலதா விஜயகாந்த் குடும்பத்துடன் லப்பர் பந்து படம் பார்த்துள்ளார்.
அதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்தபோது பேசிய பிரேமலதா, படத்தின் ஒவ்வொரு இடத்திலும் கேப்டனின் சாயல் இருப்பதாக தெரிவித்தார்.
படம் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளதற்கு பாராட்டு தெரிவித்த பிரேமலதா, கேப்டன் தங்கள் குடும்ப சொத்து அல்ல என்றும், அவர் மக்கள் சொத்து என்றும் தெரிவித்துள்ளார்.
தி கோட் படத்திலும் ஏஐ மூலம் கேப்டனை பயன்படுத்தியதற்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
லப்பர் பந்து திரைப்படம் குறித்து பிரேமலதா விஜயகாந்த் கருத்து
#Watch | "கேப்டன் எங்கள் குடும்ப சொத்து அல்ல, மக்கள் சொத்து!"
— Sun News (@sunnewstamil) September 28, 2024
'லப்பர் பந்து' திரைப்படம் குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!#SunNews | #LubberPandhu | #CaptainVijayakanth | #PremalathaVijayakanth pic.twitter.com/xcFjhKdrja