LOADING...
'போர்த்தொழில்' சோனிலைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது என அதிகாரபூர்வ அறிவிப்பு 
'போர் தொழில்' திரைப்படம், சோனிலைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது

'போர்த்தொழில்' சோனிலைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது என அதிகாரபூர்வ அறிவிப்பு 

எழுதியவர் Venkatalakshmi V
Aug 01, 2023
01:59 pm

செய்தி முன்னோட்டம்

சென்ற மாதம் வெளியாகி, சூப்பர்டூப்பர் ஹிட் ஆன திரைப்படம், 'போர் தொழில்'. கிரைம்- திரில்லர் பாணியில் உருவான இந்த திரைப்படத்தை இயக்கி இருந்தது ஒரு புதுமுக இயக்குனர், விக்னேஷ் ராஜா என்பவர் என்பது கூடுதல் சுவாரசியம். முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களை சீட் நுனியில் உட்கார வைக்கும் இறுக்கமான திரைக்கதை மூலம் பாராட்டை பெற்றிருந்தார் விக்னேஷ். இத்திரைப்படத்தில் சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் ஆகியோர் முன்னணி வேடத்தில் நடித்திருந்தனர். இவர்களோடு மறைந்த நடிகர் சரத் பாபு ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் கடந்த ஜூன்-9ஆம் தேதி திரையரங்கில் வெளியான நிலையில், வரும் ஆகஸ்ட்-11 முதல் சோனிலைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

'போர் தொழில்' சோனிலைவ் தளத்தில் வெளியாகிறது