பொன்னியின் செல்வன் 2 ப்ரோமோஷன் நெகிழ்வுடன் நிறைவடைந்தது!
'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகம், நாளை திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது. PS-2காக இந்தியா முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டு படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில், படக்குழுவினர் ஈடுபட்டனர். குறிப்பாக படத்தின் பிரதான நடிகர்களான விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி, நால்வரும் பல ஊர்களுக்கு ஒன்றாக சுற்று பயணம் மேற்கொண்டனர். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக பெங்களூருவிற்கு சென்ற போது, இனி இதுபோல அனைவரும் ஒன்றாக பணியாற்றவோ, பயணிக்கவோ முடியாது என்பதை உணர்ந்த ஜெயம் ரவி, துக்கம் தாளாமல் கண் கலங்கினார். அந்த வீடியோ வைரலானது. தற்போது, மும்பையில் நடைபெற்ற ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், கார்த்தியும் கண் கலங்கி உள்ளார். அவரை மேடையில் இருந்த படக்குழுவினர் தேற்றினர்.