Page Loader
ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த பொன்னியின் செல்வன் 2 ட்ரைலர், வெளியானது
பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த பொன்னியின் செல்வன் 2 ட்ரைலர், வெளியானது

எழுதியவர் Venkatalakshmi V
Mar 29, 2023
10:03 pm

செய்தி முன்னோட்டம்

பொன்னியின் செல்வன் 2 பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில், இன்று (மார்ச் 29 )மாலை நடைபெற்றது. இந்த படத்தில் மொத்தம் 7 பாடல்கள். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் பாடல்கள் வெளியானது. அதனை தொடர்ந்து, படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது. ஏற்கனவே படத்தின் தயாரிப்பாளர்கள், 9 :30 மணிக்கு ட்ரைலர் வெளியிடப்படும் என அறிவித்திருந்தனர். ஆனால், சிறிது தாமதமாக 10 மணிக்கு தான் ட்ரைலர் வெளியிடப்பட்டது. இந்த விழாவிற்கு கமல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருடன், சிம்புவும் வந்திருந்தார். இதோடு, படத்தின் நடிகர், நடிகைகள் அனைவரும் வருகை தந்திருந்தனர். இந்த திரைப்படம், ஏப்ரல் 28 திரைக்கு வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் ட்ரைலர்