Page Loader
பொன்னியின் செல்வன்-2 படத்தின் ஆடியோ லாஞ்சிற்கு சிறப்பு விருந்தினராக கமல் பங்கேற்கிறார்!
பொன்னியின் செல்வன்-2 படத்தின் சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது

பொன்னியின் செல்வன்-2 படத்தின் ஆடியோ லாஞ்சிற்கு சிறப்பு விருந்தினராக கமல் பங்கேற்கிறார்!

எழுதியவர் Venkatalakshmi V
Mar 27, 2023
05:51 pm

செய்தி முன்னோட்டம்

பொன்னியின் செல்வன் 2 படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வரும் மார்ச் 29-ஆம் தேதி அன்று வெளியிடப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது. இன்னிலையில், முதல் பாகத்தை போலவே, இதை பிரமாண்ட முறையில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதன்படி, மார்ச் 29, நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் விழா நடத்த திட்டமிட்டுள்ளதாக, தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இதை விழாவிற்கு 'உலக நாயகன்' கமல் ஹாசன் தலைமை தாங்குகிறார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவிற்கு, ரஜினி மற்றும் கமல் இருவரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, இம்முறை ரஜினிகாந்தும் பங்கு பெறுவாரா எனத்தெரியவில்லை. படத்தின் முதல் பாடலான 'அகநக' ஏற்கனவே 5 மொழிகளில் வெளியான நிலையில், படத்தில் மேலும் 7 பாடல்கள் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

ட்ரைலர் வெளியீட்டு விழாவிற்கு கமல் சிறப்பு விருந்தினர்

ட்விட்டர் அஞ்சல்

PS 2 ட்ரைலர் வெளியீட்டு அறிவிப்பு