'உன் சமயலறையில்' முதல் 'ராட்சஸ மாமனே' வரை வரிகளால் நம்மை கவர்ந்த பாடலாசிரியர் கபிலன் பிறந்தநாள்
புதுச்சேரியில் பிறந்த கபிலன், வளர்ந்தது சென்னையின் வியாசர்பாடியில் தான். அங்கே பொதுவாக அனைத்து விசேஷங்களுக்கும் கானா பாடல்கள் பாடுவது வழக்கம். இரங்கல் கூட்டங்களுக்கு, கவிதைகள் கூட அந்த வடிவத்திலேயே தான் இருக்கும். அதை பார்த்து வளர்ந்ததாலேயே என்னமோ, கபிலனுக்கு சென்னை தமிழ் பாடல்கள் கை வந்த கலை. சிறு வயது முதல் கவிதை மேல் கொண்ட ஈர்ப்பால், சினிமாத்துறையில் கால் வைத்தவர், 'உன் சமையல் அறையில்' என மெலடி பாடல்கள் முதல், 'மெரசலாயிட்டேன்' என குத்து பாடல்கள் வரை, வெர்சடைல் ரைட்டர். அவரின் பிறந்தநாளான இன்று, அவரின் வரிகளில் ஹிட் ஆன சில பாடல்களை பற்றி பாப்போம். 'உன் சமையல் அறையில்': முழுக்க முழுக்க சமையல் சாமான்களை கொண்டு எழுதியிருப்பார் கபிலன்.
கபிலன் வரிகளில் புகழ்பெற்ற பாடல்கள்
'சென்னை பட்டினம்': சென்னையில் நிலவி வரும் நிதர்சனத்தை படம்பிடித்த பாடல். 'ஆள் தோட்ட பூபதி': சென்னையில் வட்டார மொழியை திரைக்கு ஸ்டைலிஷாக கொண்டு வந்த பாடல். விஜய்யின் திரை வரலாற்றில் முக்கியமான பாடல் இது. 'ஆலங்குயில்': கேள்வி-பதில் பாணியில் உருவாகிய வித்தியாசமான பாடல் 'அர்ஜுனர் வில்லு': விஜய்க்கு மாஸ் ஏற்படுத்திய மற்றுமொரு பாடல் 'கண்ணும் கண்ணும் நோக்கியா': டெக்னாலஜி குறித்தும் தன்னால் எழுத முடியும் என கபிலன் நிரூபித்த பாடல் 'உன் பார்வையில்': இளம்-காதல் ஜோடிகளின் எண்ணத்தை படம்பிடித்து காட்டும் பாடல் 'வராரு வராரு': 'கல்யாண சாவு' பாடல் இப்படிதான் இருக்கும் என்று நமக்கு அறிமுகப்படுத்திய பாடல் 'ராட்சஸ மாமனே': சரித்திர படங்களிலும் தன்னால் பாடல் எழுத முடியும் என நிரூபித்த பாடல்