Page Loader
இந்திய திரையுலகமே திரண்டு வந்த ஏசியாநெட் இயக்குனர் கே மாதவன் இல்ல திருமண விழா; வைரலான புகைப்படங்கள்
இந்திய திரையுலகமே திரண்டு வந்த திருமண விழா

இந்திய திரையுலகமே திரண்டு வந்த ஏசியாநெட் இயக்குனர் கே மாதவன் இல்ல திருமண விழா; வைரலான புகைப்படங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 11, 2023
01:13 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய திரையுலகமே சமீபத்தில் ராஜஸ்தானில் சங்கமித்தது. தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடா என அனைத்திந்திய திரையுலக ஜாம்பவான்கள் அனைவரும் ராஜஸ்தானில் நடைபெற்ற திருமண வைபவத்தில் ஒன்றுதிரண்டனர். ஏசியாநெட் நிறுவன இயக்குனர், கே.மாதவன் இல்ல திருமண விழாவிற்காகதான் இந்த கோலாகலம். மலையாள நடிகர்கள் மோகன்லால், பிருத்விராஜ் சுகுமாரன், உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் பாலிவுட் நடிகர்கள் அக்ஷய் குமார், அமீர்கான், கரண் ஜோஹர் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த திருமண விழாவின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. கமல் ஹாசன், பட்டு வெட்டி சட்டை கட்டிகொண்டு கம்பீரமாக அமர்ந்திருக்கும் இந்த குறிப்பிட்ட புகைப்படம், கமல் ரசிகர்களால் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

டிவிட்டரில் வைரலாகும் கமலஹாசன் மற்றும் அக்ஷை குமார் புகைப்படங்கள்

Instagram அஞ்சல்

நடிகர்கள் மோகன்லால் மற்றும் அக்ஷை குமார் நடனம்

ட்விட்டர் அஞ்சல்

உலகநாயகனுடன் அக்ஷய் குமார்