'காதல் கொண்டேன்' ஆதி இப்போ என்ன செய்கிறார் தெரியுமா?
செய்தி முன்னோட்டம்
இயக்குநர் செல்வராகவன் 'துள்ளுவதோ இளமை' படத்திற்கு பிறகு, தம்பி தனுஷை வைத்து 'காதல் கொண்டேன்' என்ற படத்தை இயக்கினார்.
கோலிவுட்டின் கல்ட் கிளாசிக் என்று கருதப்படும் அந்த திரைப்படத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளராகவும், நா.முத்துகுமார் பாடலாசிரியராகவும் பணியாற்றி இருந்தனர்.
நடிகை சோனியா அகர்வால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த படம், தமிழ் திரையுலகில் பயங்கர ஹிட் ஆனது.
தனுஷிற்கு அடுத்தடுத்து மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க பெரும் வாய்ப்பாக அது அமைந்தது.
இதே திரைப்படத்தில், சோனியா அகர்வாலின் காதலன் கதாபாத்திரத்தில், சுதீப் என்பவரும் அறிமுகமாகியிருந்தார்.
ஆதியாக நடித்திருந்த சுதீப்பிற்கு, அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்க போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை போலும்.
Actor Adi
விளம்பர படத்தில் நடிக்கும் நடிகர் ஆதி
காதல் கொண்டேன் படத்திற்கு பின்னர், 'என்னவோ பிடிச்சிருக்கு', 'காதலே ஜெயம்' போன்ற படங்கள் நடித்தார் சுதீப்பிற்கு தோல்வியை தந்தது.
அதனால், இதன் பிறகு ஹிந்தி மற்றும் பெங்காலி படங்கள் நடிக்க போய்விட்டார் .
அதோடு வட மொழிகளின் டிவி சீரியல்களிலும் நடித்துவருகிறார்.
இந்நிலையில், காக்கி உடையில் டிரைவர் போன்ற தோற்றத்தில் இருக்கும் இவரது புகைப்படம், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை அவரே தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.
அந்த புகைப்படத்தை பார்த்து, 'காதல் கொண்டேன்' படத்தில் நடித்த நடிகருக்கு, இப்படி ஒரு நிலைமையா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதனிடையே, அது ஒரு வங்கி விளம்பரத்துக்காக இந்த தோற்றத்தில் இருப்பதாக அவரது பதிவில் சுதீப் குறிப்பிட்டுள்ளார்.