Page Loader
ஆஸ்கர் சம்பவம், பிரிந்திருந்த எங்களை நெருக்கமாக்கியது- ஜடா பிங்கெட்
வில் ஸ்மித்- ஜடா பிங்கெட் தம்பதிக்கு ஜேடன் ஸ்மித் மற்றும் வில்லோ ஸ்மித் என இரு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கர் சம்பவம், பிரிந்திருந்த எங்களை நெருக்கமாக்கியது- ஜடா பிங்கெட்

எழுதியவர் Srinath r
Oct 18, 2023
02:17 pm

செய்தி முன்னோட்டம்

பிரிந்திருந்த ஹாலிவுட் நட்சத்திர தம்பதி வில் ஸ்மித் மற்றும் ஜடா பிங்கெட் ஆகியோரை, ஆஸ்கர் அரங்கில் நடந்த சம்பவம் நெருக்கமாக்கி உள்ளதாக ஜடா பிங்கெட் தெரிவித்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு முதல், தானும் தனது கணவரான வில் ஸ்மித்தும் பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிவித்த ஜடா, தனது கணவர் ஆஸ்கர் விழாவில் கிறிஸ் ராக்கை அறைந்தது, அவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ வாய்ப்பு ஏற்படுத்தியதாக கூறியுள்ளார். கடந்த ஆண்டு ஆஸ்கர் விழாவில், அலோபீசியா அரேட்டா என்ற அரிய வகை முடி உதிரும் நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஜடா பிங்கெட் குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளரான கிறிஸ் ராக் கிண்டல் செய்தார். இதற்கு எதிர்வினையாக ஜடாவின் கணவர் வில் ஸ்மித், கிறிஸ் ராக்கை கன்னத்தில் அறைந்தார்.

2nd card

ஆஸ்கர் சம்பவம் நாங்கள் விவாகரத்து பெறுவதில் இருந்து தடுத்துள்ளது- ஜடா பிங்கெட்

நியூயார்க்கில் உள்ள பெரல்மேன் கலைநிகழ்ச்சி மையத்தில் பங்கேற்ற நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், ஜடா இந்த சம்பவம் பகிர்ந்துகொண்டார். கிறிஸ் ராக்கை வில் ஸ்மித் அடித்ததற்கு பிறகு, தான் தன் கணவரிடம், "நீ கிறிஸ் ராக்கை அடித்து விட்டாயா?, வருத்தப்படாதே, உனக்கு ஆதரவாக நான் நிற்பேன்" "இங்கு வரும்போது நான் உன் மனைவியாக வரவில்லை. ஆனால் இங்கிருந்து போகும்போது உன் மனைவியாக வருவேன். இந்த பிரச்னைக்கு பின்னர் நடக்கவிருக்கும் எதிர்வினைகளை நாம் இருவரும் இணைந்து சந்திப்போம்" என தன் கணவரிடம் தெரிவித்ததாக கூறியுள்ளார். மேலும் இச்சம்பவம், இவர்கள் இருவரும் விவாகரத்து பெறுவதிலிருந்து தடுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார். தற்சமயம் இருவரும் பிரிந்து வாழ்ந்தாலும், விவாகரத்து குறித்து யோசிக்கவில்லை என கூறியுள்ளார்.