
மோகன்லாலை தொடர்ந்து, பகத் பாசிலிடம் வருமான வரித்துறையினர் விசாரணை
செய்தி முன்னோட்டம்
கேரளா திரையுலகில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் வருமான வரி துரையின் சோதனைகளின் அடுத்த கட்டமாக, நடிகர் பகத் பாசிலிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்னர், பிரபல தயாரிப்பாளர்கள் சிலர், வருமான வரி ஏய்ப்பு செய்து இருப்பதாகவும், அதற்கான ஆதாரங்கள் உள்ளதென்றும், வருமான வரித்துறையினர், தயாரிப்பாளர் அலுவலகங்கள், மற்றும் முக்கிய நடிகர்கள் இல்லத்தில் திடீர் சோதனை செய்தனர்.
தொடர்ந்து நடிகர் பிருத்விராஜிடமும், சென்ற வாரம் நடிகர் மோகன்லாலிடமும் விசாரிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, நடிகர் பகத் பாசிலின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாகவும், அதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் கூறப்பட்டது.
இதனை தொடர்ந்து, நேற்று(பிப்.,21) தன்னிலை விளக்கமளிக்க வருமான வரித்துறை அலுவலகத்திற்கு வந்த பகத்தின் வாக்குமூலத்தை, அதிகாரிகள் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
கேரளாவில் தொடரும் வருமான வரி சோதனை
தொடரும் வருமான வரி சோதனை - பகத் பாசில் வாக்குமூலம் பதிவு https://t.co/5nHeetRV3I #ITraids #FahadhFaasil
— Tamil The Hindu (@TamilTheHindu) February 22, 2023