Page Loader
நடிகர் மோகன்லால் வீட்டில் வருமானவரித்துறை விசாரணை எனத்தகவல்
மோகன்லாலிடம் வருமானவரித்துறை விசாரணை

நடிகர் மோகன்லால் வீட்டில் வருமானவரித்துறை விசாரணை எனத்தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 18, 2023
06:01 pm

செய்தி முன்னோட்டம்

மலையாள தயாரிப்பாளர் ஆன்டனி பெரும்பாவூர் மற்றும் சிலரின் மீது எழுந்த வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக, நேற்று நடிகர் மோகன்லாலின் இல்லத்திற்கு சென்று விசாரணை நடித்தியுள்ளார், வருமான வரித்துறை அதிகாரிகள். சில மாதங்களுக்கு முன்னர், பிரபல தயாரிப்பாளர்கள் சிலர், வருமான வரி ஏய்ப்பு செய்து இருப்பதாகவும், அதற்கான ஆதாரங்கள் உள்ளதென்றும், வருமான வரித்துறையினர், தயாரிப்பாளர் அலுவலகங்கள், மற்றும் முக்கிய நடிகர்கள் இல்லத்தில் திடீர் சோதனை செய்தனர். இதன் தொடர்ச்சியாக, ஆன்டனி பெரும்பாவூரின் நெருங்கிய நண்பரும், அவருடன் பல படங்களில் நடித்தவருமான மோகன்லாலிடன் விசாரணை செய்யவே அதிகாரிகள் சென்றதாகவும் செய்திகள் தெரிவித்தன. எனினும், விசாரணையில் என்ன தெரிவிக்கப்பட்டது என தகவல் இல்லை. தற்போது நடிகர் மோகன்லால், ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

ட்விட்டர் அஞ்சல்

மோகன்லால் வீட்டில் IT விசாரணை