ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு; ரசிகர்கள் அதிர்ச்சி
செய்தி முன்னோட்டம்
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'ஜெயிலர்' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்க பட்டுள்ளதாக, நேற்று செய்தி வெளியானதை அடுத்து, ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில், ரஜினிக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிப்பது அனைவரும் அறிந்ததே. படையப்பா படத்தை போல, இந்த படத்திலும், ரம்யா கிருஷ்ணனுக்கு நெகடிவ் கதாபாத்திரமாக இருக்கும் என யூகிப்படுகிறது.
மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில், தமன்னா நடிக்கிறாரென்றும், அவரின் பர்ஸ்ட் லுக்கை சமீபத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு. ரஜினியும் தமன்னாவும் இணையும் முதல் படம் இதுவாகும்.
மேலும் இப்படத்தில், கன்னட நடிகர் சிவராஜ்குமாரும், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலும், தெலுங்கு நடிகர் சுனிலும் நடிப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த்
பொன்னியின் செல்வன் படத்தின் போட்டியை தவிர்க்கிறதா ஜெயிலர்?
'ஜெயிலர்' படத்தின் வெற்றி ரஜினிக்கும், நெல்சனிற்கும் மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது.
ரஜினியின் முந்தைய படங்களான 'அண்ணாத்தவும்', 'தர்பாரும்' எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. நெல்சன் இயக்கத்தில் வெளியான, 'பீஸ்ட்' திரைப்படமும், எதிர்மறை விமர்சனங்களை பெற்றது.
'ஜெயிலர்' படம் முன்னதாக ஏப்ரல் மாதம் வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனால், தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருவதால், படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்படலாம் என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஏப்ரல் மாத இறுதியில், மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரவுள்ளது.
கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தை தழுவி எடுக்கப்படும் இப்படத்துடன் போட்டியிடுவதை தவிர்க்கவே, ஜெயிலர் ரிலீஸ் தள்ளிவைக்கப்படுகிறது என்றும் செய்திகள் யூகிக்கின்றன.