'ஜெயிலர்' படத்தில் நடிக்கும் தமன்னாவின் பர்ஸ்ட் லுக் வெளியானது
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படமான 'ஜெயிலர்' பற்றிய மற்றொரு அப்டேட்டை வெளியிட்டுள்ளது சன் பிச்சர்ஸ். ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிப்பது அனைவரும் அறிந்ததே. படையப்பா படத்தை போல, இந்த படத்திலும் ரம்யா கிருஷ்ணனுக்கு நெகடிவ் கதாபாத்திரமாக இருக்கும் என யூகிப்படுகிறது. மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில், தமன்னா நடிப்பதாகவும் செய்திகள் உலா வந்தன. இந்நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக தமன்னாவின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. ரஜினியும் தமன்னாவும் இணையும் முதல் படம் இதுவாகும். எனினும், அவரின் கதாபாத்திரம் குறித்து எந்த தகவலும் வெளி வரவில்லை. மேலும் இப்படத்தில், கன்னட நடிகர் சிவராஜ்குமாரும், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலும், தெலுங்கு நடிகர் சுனிலும் நடிப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.