Page Loader
ரஜினியின் ஜெயிலர் படத்தில்  பிரபல மலையாள நடிகர்
மோகன்லால் - ரஜினிகாந்த் புகைப்படம்

ரஜினியின் ஜெயிலர் படத்தில் பிரபல மலையாள நடிகர்

எழுதியவர் Saranya Shankar
Jan 07, 2023
05:11 pm

செய்தி முன்னோட்டம்

ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் படம் 'ஜெயிலர்.' இந்த படத்தை பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் இயக்குகிறார். இப்படத்தை கலாநிதி மாறனின் சன் பிக்சர் நிறுவனம் தயாரிக்கிறது. முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ரஜினியுடன் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் போன்றோர் நடித்துள்ளனர். தமிழ் திரையுலகில் சிவராஜ்குமார் அவர்கள் அறிமுகமாகும் முதல் படம் இதுவாகும். இந்த படம் 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 'தலைவர் 169' என்ற பெயரில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பை ஏப்ரல் மாதம் முன்னதாக நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு 60 சதவீத முடிவடைந்து விட்டதாக கூறப்படுகிறது.

ரஜினி-மோகன்லால்

கமல், விஜய்,சூர்யாவை தொடர்ந்து ரஜினியுடனும் இணைக்கிறார் மோகன்லால்.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவினை ஏப்ரலில் நடத்த திட்டமிட்டுள்ளாக கூறப்படுகிறது. மேலும் படத்தின் டீஸரும் அதே மாதத்தில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ரிலீஸ் தேதியை பற்றிய எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வரவில்லை. தற்போது பிரபல மலையாள நடிகர் மோகன்லால் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 8, 9 ஆகிய தேதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக இரண்டு நாள் கால்ஷீட்டை மோகன்லால் ஒதுக்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இது ரஜினிகாந்த் மற்றும் மோகன்லால் இணைந்து நடிக்கும் முதல் படமாகும். தமிழில் விஜய், சூர்யா, கமல்ஹாசனை தொடர்ந்து மோகன்லால் அவர்கள் தற்போது ரஜினியுடனும் சேர்ந்து நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.