Page Loader
சல்மான் கான் துப்பாக்கி சூடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் போலீஸ் காவலில் தற்கொலை
காவல்துறையின் கூற்றுப்படி, தபன் போலீஸ் காவலில் இருக்கும்போது தற்கொலைக்கு முயன்றார்

சல்மான் கான் துப்பாக்கி சூடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் போலீஸ் காவலில் தற்கொலை

எழுதியவர் Venkatalakshmi V
May 01, 2024
04:21 pm

செய்தி முன்னோட்டம்

பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றவாளிகளில் ஒருவர், இன்று போலீஸ் காவலில் தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 32 வயதான அனுஜ் தபன் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், மும்பையில் உள்ள சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய இரண்டு நபர்களுக்கு ஆயுதங்களை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டார். காவல்துறையின் கூற்றுப்படி, தபன் போலீஸ் காவலில் இருக்கும்போது தற்கொலைக்கு முயன்றார். உடனே அவர் மும்பையின் ஜிடி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட, அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும், சிறிது நேரத்தில், அவர் இறந்து போனார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

embed

போலீஸ் காவலில் தற்கொலை

#BREAKING || நடிகர் சல்மான்கான் வீட்டின் அருகே கடந்த ஏப்ரல் மாதம் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் துப்பாக்கி சூடு சம்பவத்தில் கைதான அனுஜ்தாபன் என்பவர் தற்கொலை மும்பை சிறப்பு பிரிவு போலீசாரின் காவலில் இருந்த அனுஜ்தாபன் தற்கொலை#SalmanKhan #bollywood #Police pic.twitter.com/KXcK4Y3IHy— Thanthi TV (@ThanthiTV) May 1, 2024