நாக சைதன்யா- சோபிதா திருமண நாளில், சமந்தா பதிவிட்ட இன்ஸ்டா பதிவு இதுதான்!
நடிகர் நாக சைதன்யாவுக்கும், நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. நேற்று, டிசம்பர் 4ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. நடிகர்களின் திருமண நாளில், நாக சைதன்யாவின் முன்னாள் மனைவியும், நடிகையுமான சமந்தா ரூத் பிரபு ஒரு ரகசிய இடுகையைப் பகிர்ந்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் கதைகளில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். ஹாலிவுட் பிரபலம் வயோலா டேவிஸ் பற்றிய வீடியோவை வெளியிட்டார். அதில் ஒரு சிறுவனுக்கும், சிறுமிக்கும் இடையிலான மல்யுத்தப் போட்டி இடம்பெற்றிருந்தது.
சமந்தாவின் இன்ஸ்டா பதிவு
அந்த வீடியோவில் தொடக்கத்தில், பையன் முழு நம்பிக்கையுடன் போட்டிக்குள் நுழைகிறான், ஆனால் போட்டி வெளிவருகையில், இறுதியில் அவன் பெண்ணிடம் தோற்கடிக்கப்படுகிறான். வயோலா டேவிஸ் இந்த இடுகைக்கு தலைப்பிட்டார்: "ஒரு பூவைப் போல உடையக்கூடியது அல்ல, வெடிகுண்டு போல வெடிக்ககூடியது #FightLikeAGirl." சமந்தா தனது சொந்த இன்ஸ்டாகிராம் கதையில் வீடியோவை மறுபகிர்வு செய்து, "#FightLikeAGirl" என்று எழுதியிருந்தார். சோபிதா துலிபாலாவுடனான நாக சைதன்யாவின் திருமணத்துடன் இணைந்த அவரது இடுகையின் நேரம் ரசிகர்களிடையே பலவித யூகங்கங்களை தூண்டியுள்ளது.
நாகர்ஜூனாவின் வாழ்த்து செய்தி
இந்த திருமணம் முடிந்ததும் மூத்த நடிகர் நாகார்ஜுனா, நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் திருமணத்தின் படங்களை பகிர்ந்துள்ளார். மணப்பெண் சோபிதா தங்க நிற காஞ்சிவரம் புடவை அணிந்திருந்தார். மணமகன், மறுபுறம், வேட்டியுடன் இணைந்த வெள்ளை குர்தாவை அணிந்திருந்தார். அந்த பதிவில்,"சோபிதாவும், சாயும் சேர்ந்து இந்த அழகான அத்தியாயத்தைத் தொடங்குவதைப் பார்ப்பது எனக்கு ஒரு சிறப்பு மற்றும் உணர்ச்சிகரமான தருணமாக இருந்தது. என் அன்புக்குரிய சாய்க்கு வாழ்த்துக்கள், அன்பான சோபிதா - நீங்கள் குடும்பத்திற்கு வருக" என்றார். தெரியாதவர்களுக்கு, நாக சைதன்யா முன்பு சமந்தா ரூத் பிரபுவை 2017 இல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். எனினும் இந்த ஜோடி அக்டோபர் 2021 இல் ஒரு கூட்டு அறிக்கையில் தங்கள் பிரிவை அறிவித்தனர்.