LOADING...
'Oh God Beautiful': 'பரிதாபங்கள்' கோபி, சுதாகர் நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியீடு

'Oh God Beautiful': 'பரிதாபங்கள்' கோபி, சுதாகர் நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியீடு

எழுதியவர் Venkatalakshmi V
Feb 11, 2025
02:35 pm

செய்தி முன்னோட்டம்

பிரபல யூடியூப் சேனல் 'பரிதாபங்கள்'. இதன் முன்னணி நடிகர்கள் கோபி மற்றும் சுதாகர் தயாரித்து நடிக்கும் புதிய படத்தின் தலைப்பினை தற்போது அறிவித்துள்ளனர். யூடியூப் சேனல்கள் மக்களிடையே பிரபலமாக தொடங்கியபோது மெட்ராஸ் சென்ட்ரல் (Madras Central) என்ற யூடியூப் சேனல் மூலம் மக்களிடையே பிரபலமானவர்கள் கோபி மற்றும் சுதாகர் இணை. அப்போதைய ட்ரெண்டிங் செய்திகள், அரசியல் தலைவர்களையும் போன்றவற்றை கலாய்த்து அவர்கள் வெளியிட்ட வீடியோக்கள் மக்களிடையே பிரபலமடைந்தது. தங்களுக்கென தனி ரசிகர்கள் கூட்டம் உண்டானதை அடுத்து,"பரிதாபங்கள்" என்ற தனி யூடியூப் சேனல் தொடங்கி, அன்றாட வாழ்க்கையில் கடந்து போகும் வினோத மனிதர்களின் செயல்களை நக்கல் செய்து 'பரிதாபங்கள்' என வெளியிட துவங்கினர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

இரண்டாம் முயற்சி

ஏற்கனவே கிரௌட் ஃபண்டிங் முறையில் திரைப்பட தயாரிக்க முதல் முயற்சி

இந்த இணை கடந்த 2019ஆம் ஆண்டில், கிரவுட் ஃபண்டிங் முறையில் தமிழ் சினிமாவில் படம் தயாரிக்க முயற்சி செய்தனர். ஆனால் பல பிரச்சனைகளால் அந்த திட்டம் இடை நிறுத்தப்பட்டது. பின்னர் கோபி, சுதாகர், சோம்பி, உரியடி 2, செவன் போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தனர். தற்போது, கோபி மற்றும் சுதாகர் பரிதாபங்கள் தயாரிப்பு நிறுவனம் மூலம் ஒரு புதிய படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு 'Oh God Beautiful' என்று பெயரிட்டுள்ளதாக இன்று ஒரு வீடியோ மூலம் அறிவித்தது படக்குழு. இப்படத்தினை விஷ்ணு விஜயன் இயக்குகிறார்.