LOADING...
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குட் பேட் அக்லி' OG சம்பவம் லிரிக்கல் பாடல் வெளியானது

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குட் பேட் அக்லி' OG சம்பவம் லிரிக்கல் பாடல் வெளியானது

எழுதியவர் Venkatalakshmi V
Mar 18, 2025
06:43 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் அஜித் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. ஜிவி பிரகாஷ் இசையில், அவரும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனும் பாடிய இந்த பாடலின் BTS வீடியோ இரு தினங்களுக்கு முன்னர் வெளியானதிலிருந்து ரசிகர்கள் மத்தியில் எதிரிபார்ப்பை தூண்டியது. தற்போது அந்த பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. 'குட் பேட் அக்லி' திரைப்படம், வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக மீண்டும் த்ரிஷா நடிக்கிறார். இந்த ஜோடி சமீபத்தில் வெளியான அஜித்தின் 'விடாமுயற்சி' படத்திலும் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன், பிரசன்னா, யோகி பாபு, சுனில் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post