கமலை பிரிந்ததில் வருத்தமில்லை- வைரலாகும் முன்னாள் மனைவி சரிகா தாகூரின் நேர்காணல்
செய்தி முன்னோட்டம்
கமல்ஹாசன் உடனான காதல் குறித்து நடிகை ஸ்ரீவித்யா வழங்கிய பழைய பேட்டி அண்மையில் வைரலானதை தொடர்ந்து, அவரின் முன்னாள் மனைவியான சரிகா தாகூர் கமலை பிரிந்தது குறித்து வழங்கிய நேர்காணலும் தற்போது வைரலாக பரவி வருகிறது.
பாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகையும், கமல்ஹாசனின் முன்னாள் மனைவியும் ஆன சரிகா, திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகினார். இந்த தம்பதிக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் என மகள்கள் உள்ளனர்.
2nd card
கமல்- சரிகா திருமண வாழ்க்கை
பாலிவுட்டில் நடிகையாகவும், ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றி வந்த சரிகா மற்றும் கமலஹாசன் காதலித்து வந்த நிலையில், இவர்களுக்கு 1986ல் முதல் குழந்தையான சுருதிஹாசன் பிறந்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் இவர்கள் திருமணம் செய்து கொண்ட நிலையில், கமலஹாசன் உடன் சரிகா சென்னைக்கு இடம் பெயர்ந்தார்.
இந்த தம்பதிக்கு 1991 ஆம் ஆண்டில், இரண்டாவதாக அக்ஷரா ஹாசன் பிறந்தார். இந்நிலையில், கடந்த 2004 ஆம் ஆண்டு இந்த தம்பதி விவாகரத்து பெற்றனர்.
விவாகரத்துக்கு பின் மும்பை திரும்பிய சரிகா, படங்களில் நடிகையாகவும், ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றத் தொடங்கினார்.
3rd card
"கரியரில் உச்சத்தில் இருந்த போது சினிமாவை விட்டு விலகியது வருத்தமில்லை"
தற்போது வைரலாகி வரும் அந்த நேர்காணலில், சினிமா கரியர் உச்சத்தில் இருக்கும்போது திருமணம் செய்து கொண்டதாகவும், குடும்ப வாழ்க்கையை கவனிப்பதற்காக சினிமாவை விட்டு முழுமையாக விலகியதாகவும் அவர் கூறியிருந்தார்.
மேலும் அவருக்கு எத்தனை வாய்ப்பு வழங்கப்பட்டாலும், அத்தனை முறையும் இதே போன்று வாழ்வார் எனவும் தெரிவித்திருந்தார்.
கமலஹாசனை பிரிந்தது குறித்து கேட்கப்பட்ட போது, அவருக்கு வேறொரு பெண்ணை பிடித்திருந்தால், தான் என்ன செய்ய முடியும் என பதில் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசியவர், ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் என இரு அழகான மகள்கள் இருப்பதால், வாழ்க்கையில் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
கமலஹாசன் நடிகை கௌதமியுடன் 2003- 2016 வரை லிவ்விங் டு கெதரில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.