₹2,000 கோடி பட்ஜெட், ₹450 கோடிக்கு OTT உரிமை: 'ராமாயணம்' திரைப்படத்தின் பாக்ஸ் ஆபீஸ் கணக்கு ஓர் பார்வை
செய்தி முன்னோட்டம்
இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர் (ராமர்), சாய் பல்லவி (சீதை) மற்றும் யாஷ் (ராவணன்) நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'ராமாயணம்: பாகம் 1' திரைப்படம் இன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சுமார் ₹2,000 கோடி பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இத்திரைப்படம், இந்திய சினிமா வரலாற்றிலேயே இதுவரை பார்த்திராத மிகப்பெரிய வணிக இலக்கை எட்ட முயன்று வருகிறது. இந்தியத் திரைப்படங்களின் வெளியீட்டு சாதனைகளை முறியடிக்கும் வகையில், இத்திரைப்படம் உலகளவில் 59,000 திரையரங்குகளில் வெளியாகிறது. அதில், இந்தியாவில் 9,000 திரையரங்குகள் மற்றும் வெளிநாடுகளில் 50,000 திரையரங்குகளில் வெளியாகிறது.
டிஜிட்டல் மற்றும் இசை உரிமைகள்
திரையரங்கிற்கு பிந்தைய உரிமைகள்
திரையரங்கு வெளியீட்டிற்கு முன்பாகவே இத்திரைப்படம் டிஜிட்டல் மற்றும் இசை உரிமைகள் மூலம் கணிசமான தொகையை ஈட்டியுள்ளது.
ஜியோஸ்டார் நிறுவனம் முதல் பாகத்தின் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமைகளை சுமார் **₹450 கோடிக்கு கைப்பற்றியுள்ளது.
திரையரங்க வெளியீட்டிற்குப் பிறகு, 'JioHotstar தளத்தில் கட்டண அடிப்படையில் இத்திரைப்படம் ஒளிபரப்பப்படவுள்ளது.
பிரபல இசை அமைப்பாளர்கள் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்துள்ள இத்திரைப்படத்தின் இரு பாகங்களின் இசை உரிமைகளை டி-சீரிஸ் நிறுவனம் ₹75 கோடிக்கு கைப்பற்றியுள்ளது.
பாக்ஸ் ஆபீஸ்
பாக்ஸ் ஆபீஸ் இலக்கு: ₹4,000 கோடி வசூல் தேவையா?
டிஜிட்டல் மற்றும் இசை உரிமைகள் மூலம் சுமார் ₹475 - ₹500 கோடி வரை தயாரிப்பாளர்களுக்கு கிடைத்தாலும், தயாரிப்புச் செலவை மீட்க திரையரங்குகள் மூலம் மட்டுமே இன்னும் ₹1,500 கோடியை ஈட்ட வேண்டியுள்ளது.
திரையரங்கு வசூலில் வரி மற்றும் விநியோகஸ்தர்களின் பங்கீடு போக, தயாரிப்பாளரின் கைக்குத் தொகை வர வேண்டும் என்றால், உலகளவில் இத்திரைப்படம் ₹3,000 கோடி முதல் ₹4,000 கோடி வரை மொத்த வசூல் செய்ய வேண்டும் என்று வணிக பகுப்பாய்வாளர் ரமேஷ் பாலா தெரிவித்துள்ளார்.
முதல் நாள் வசூல்
முன்பதிவு & முதல் நாள் வசூல் கணிப்பு
முதல் 5 நாட்களுக்கான முன்பதிவு இந்தியாவில் ₹100 கோடியையும், உலகளவில் ₹140 கோடியையும் கடந்துள்ளது.
பிவிஆர் ஐநாக்ஸ் திரையரங்குகளில் மட்டும் 2.5 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் முதல் நாளில் ₹75-₹100 கோடி வரையிலும், வெளிநாடுகளில் முதல் வார இறுதியில் சுமார் ₹180-₹225 கோடி வரையிலும் வசூலிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
ஹாலிவுட்டின் 'அவெஞ்சர்ஸ்', 'அவதார்' போன்ற பிரம்மாண்ட காட்சி அனுபவத்தை இத்திரைப்படம் வழங்கியுள்ளதால், வெளிநாடுகளில் முதல் 3 நாட்களில் ₹300-₹500 கோடி வரை வசூல் செய்ய வாய்ப்புள்ளது.
இரண்டாம் பாகத்திற்கு எதிர்பார்ப்பை உருவாக்க வேண்டிய பொறுப்பும் முதல் பாகத்திற்கு இருப்பதால், படத்தின் நேர்மறையான விமர்சனங்களே இதன் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியைத் தீர்மானிக்கும்.