Page Loader
நெட்ஃபிலிக்ஸ்-இல் வெளியாகிறது அஜித்தின் விடாமுயற்சி
நெட்ஃபிலிக்ஸ்-இல் வெளியாகிறது அஜித்தின் விடாமுயற்சி

நெட்ஃபிலிக்ஸ்-இல் வெளியாகிறது அஜித்தின் விடாமுயற்சி

எழுதியவர் Venkatalakshmi V
Jan 17, 2024
10:55 am

செய்தி முன்னோட்டம்

நடிகர் அஜித்குமார் நடித்துவரும் 'விடாமுயற்சி' படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதற்கான அறிவிப்பை தற்போது இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதை லைகா நிறுவனமும் உறுதி செய்துள்ளது. மேலும், விடாமுயற்சி திரைப்படத்தின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளின் பதிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'விடாமுயற்சி' திரைப்படத்தின் அறிவிப்பு, கடந்த ஆண்டு வெளியானது. எனினும், இப்படத்தில் படப்பிடிப்பு சமீபத்தில் தான் துவங்கியது. அசர்பைஜான் நாட்டில் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கேசான்ட்ரா மற்றும் பலர் நடித்துவருகின்றனர். இப்படத்தை முடித்த கையோடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் அடுத்த படத்தில் அஜித் நடிக்க உள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

நெட்ஃபிலிக்ஸ்-இல் வெளியாகும் விடாமுயற்சி