
மீண்டும் மீண்டுமா? விக்னேஷ் சிவனுக்கு வந்த அடுத்த சோதனை
செய்தி முன்னோட்டம்
இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகர் அஜித்-ஐ வைத்து இயக்கவிருந்த படம், பல காரணங்களுக்காக கைவிடப்பட்டது.
அதன்பின்னர், சற்றே ஒதுங்கி இருந்த விக்னேஷ் சிவன், LIC என்ற பெயரில், பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்க போவதாக அறிவிப்பு வெளியானது.
இந்த படத்தில், பிரதீப்பிற்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.
கூடவே முக்கிய கதாபாத்திரத்தில், பிரதீப்பிற்கு அக்கா வேடத்தில் நடிகை நயன்தாரா நடிக்கப்போவதாகவும் கூறப்பட்டது.
அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே, இந்த படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என LIC நிறுவனத்தின் சார்பாக வழக்கு தொடர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில், மற்றுமொரு பிரச்னை முளைத்துள்ளது. அதாவது சம்பள பிரச்னை காரணமாக, நயன்தாராவும் படத்திலிருந்து விலகவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ட்விட்டர் அஞ்சல்
விக்னேஷ் சிவனுக்கு வந்த அடுத்த சோதனை
#Nayanthara is not part of #Lic/#LicFilm.
— Siva Prasanth (@Sivaprasanth5) January 17, 2024
- She was rumoured earlier to act as an elder sister of #PradeepRanganathan#VigneshShivan #Anirudh #KrithiShetty pic.twitter.com/7OhtLfLXTS