Page Loader
நயன்தாரா 75 : மீண்டும் இணையும் ராஜாராணி ஜோடி
நயன்தாராவுடன் மீண்டும் இணையும் ஜெய்

நயன்தாரா 75 : மீண்டும் இணையும் ராஜாராணி ஜோடி

எழுதியவர் Venkatalakshmi V
Mar 20, 2023
10:37 am

செய்தி முன்னோட்டம்

'லேடி சூப்பர்ஸ்டார்' என்று அழைக்கப்படும், நயன்தாராவின் 75-வது திரைப்படத்தின் பூஜை இரு தினங்களுக்கு முன்னர் (மார்ச் 18) நடைபெற்றது. இந்த படத்தில், நயன்தாராவுடன், ஜெய், சத்யராஜ் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அட்லீ இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான 'ராஜா ராணி' திரைப்படத்திற்கு பின்னர் மீண்டும் இந்த படத்தில் இணைகிறார்கள், நயன்தாரா மற்றும் ஜெய். சென்ற ஆண்டே, படத்தின் அறிவிப்பு வந்த நிலையில், தற்போது, இந்த படத்தின் பூஜையுடன், ஷூட்டிங் தொடங்கியுள்ளது. நிலேஷ் கிருஷ்ணா என்பவர் படத்தை இயக்குகிறார். இந்த படத்தை தயாரிக்கவிருப்பது, நாட் ஸ்டுடியோஸ். 'லேடிசூப்பர்ஸ்டார் 75' என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்ட இந்த திரைப்படம், இந்த ஆண்டின் இறுதியில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

படத்தின் பூஜைக்காக வந்திருந்த படக்குழுவினர்

ட்விட்டர் அஞ்சல்

சென்ற ஆண்டு வெளியான அறிவிப்பு