Page Loader
மன்னாங்கட்டி சின்ஸ் 1960: யோகி பாபுவுடன் மீண்டும் இணையும் நயன்தாரா
யோகி பாபுவுடன் மீண்டும் இணையும் நயன்தாரா

மன்னாங்கட்டி சின்ஸ் 1960: யோகி பாபுவுடன் மீண்டும் இணையும் நயன்தாரா

எழுதியவர் Venkatalakshmi V
Sep 18, 2023
02:25 pm

செய்தி முன்னோட்டம்

'லேடி சூப்பர்ஸ்டார்' நயன்தாரா, 'கோலமாவு கோகிலா' திரைப்படத்தில் யோகி பாபுவுடன் நடித்திருந்தார். நெல்சன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம், சூப்பர்ஹிட் ஆனது. அதன்பிறகே நெல்சனிற்கு சினிமாவில் கதவுகள் திறக்கப்பட்டது. அதேபோல, யோகி பாபுவிற்கும் இந்த திரைப்படம் ஒரு மைல்கல். இந்நிலையில், இந்த ஜோடி மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளது. 'மன்னாங்கட்டி சின்ஸ் 1960' என தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. டியூட் விக்கி இயக்கும் இந்த படத்தை, பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர். இன்று வெளியான மோஷன் போஸ்டர் படி, பழைய நாணயங்கள் மற்றும் நீதி தேவதையின் காட்சிகளுடன் ஒரு பீரியட் திரைப்படம் போல காணப்படுகிறது. இப்படத்தில், தேவதர்ஷினி, கௌரி கிஷன், நரேந்திர பிரசாத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

யோகி பாபுவுடன் மீண்டும் இணையும் நயன்தாரா