ட்ரோலர்களுக்கு அல்டிமேட்டம் கொடுத்த நடிகர் நட்டி! இணையத்தைக் கிளப்பும் புது சர்ச்சை
செய்தி முன்னோட்டம்
தமிழ் சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி (நடராஜ் சுப்பிரமணியம்), சமூக ஊடகங்களில் தன்னைத் தனிப்பட்ட முறையில் தாக்கி, ஆபாசமாகப் பேசி வரும் ட்ரோலர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அடுத்தடுத்த பதிவுகள் தற்போது இணையத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. சமூக வலைதளங்களில் எல்லை மீறும் நெட்டிசன்களுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கும் வகையில் நட்டி தனது பதிவில்,"யாராவது அசிங்கமான வார்த்தைகளைப் பயன்படுத்தினால்.. அவர்கள் விரும்புவதையே நானும் திரும்பச் செய்வேன். இதுதான் எனது கடைசி அழைப்பு (Last call).. எவனாவது என்னை அசிங்கமாகத் திட்டினால், நானும் உங்களைத் திருப்பித் திட்டுவேன். என்ன நடந்தாலும் கவலையில்லை." என பதிவிட்டார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Last call.. any one abuse me .. I ll abuse u back. No matter what happens…..😡😡😡
— N.Nataraja Subramani (@natty_nataraj) June 11, 2026
காரணம்
சர்ச்சைக்கு காரணமான 'TN 2026' திரைப்படம்
இந்த திடீர் மோதலுக்கு பின்னணியில் நட்டி நடிப்பில் அண்மையில் வெளியான 'TN 2026' திரைப்படம் இருப்பதாகக் கூறப்படுகிறது. உமாபதி ராமையா இயக்கத்தில் உருவான இந்த அரசியல் நையாண்டி திரைப்படத்தில், நட்டி நடித்திருந்தார். அவர் எப்படித் திரைத்துறையில் இருந்து அரசியல் களத்திற்குள் நுழைகிறார் என்பதே படத்தின் கதைக் களம். இப்படம் தியேட்டர்களில் வெளியானதில் இருந்தே, இது தற்போதைய தமிழக முதலமைச்சர் விஜய்யின் அரசியல் வருகையை மறைமுகமாகத் தாக்கி எடுக்கப்பட்ட ஒரு நையாண்டிப் படம் என்று சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. படக்குழுவினர் இந்த யூகங்களை மறுத்த போதிலும், இப்படம் ஓடிடி தளத்தில் வெளியானதைத் தொடர்ந்து பலர் நட்டியை தனிப்பட்ட முறையில் இலக்கு வைத்துத் தீவிரமாக ட்ரோல் செய்யத் தொடங்கினர்.