LOADING...
தேசிய விருது வென்ற 'லகான்' திரைப்படத்தின் ஆர்ட் டைரக்டர் திடீர் மரணம்
தேசிய விருது வென்ற 'லகான்' திரைப்படத்தின் ஆர்ட் டைரக்டர் திடீர் மரணம்

தேசிய விருது வென்ற 'லகான்' திரைப்படத்தின் ஆர்ட் டைரக்டர் திடீர் மரணம்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 02, 2023
01:40 pm

செய்தி முன்னோட்டம்

பாலிவுட்டின் பிரபலமான ஆர்ட் டைரக்டர் நிதின் சந்திரகாந்த் தேசாய். இவரின் கைவண்ணத்தில் உருவான பல வெற்றி படங்கள், பல விருதுகளை குவித்துள்ளது. இவரின் கலைத்திறமைக்காக நான்கு முறை தேசிய விருதும் வென்றுள்ளார். அமீர்கான் நடிப்பில் வெளியான 'லகான்', ஷாருக்கான் நடிப்பில் உருவான 'தேவதாஸ்', ஹ்ரித்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான 'ஜோதா அக்பர்' போன்ற பல படங்களின் பிரம்மாண்டத்திற்கு பின்னால், நிதினின் கலைத்திறமை தான் முக்கிய காரணம். அவர் இன்று (ஆகஸ்ட் 2) மதியம், அவரது ஸ்டுடியோவில் மர்மான முறையில் இறந்து கிடந்துள்ளார். அவருக்கு வயது 57 . அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கக்கூடும் என செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அது குறித்து போலீசார் அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

ஆர்ட் டைரக்டர் திடீர் மரணம்