சாந்தனு நடிக்கும் 'ராவண கோட்டம்' திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரிக்கை!
செய்தி முன்னோட்டம்
விஜய்யுடன் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்திற்கு பெரிதாக எந்த வெற்றி படமும் அமையவில்லை சாந்தனு பாக்யராஜிற்கு.
அதனை தொடர்ந்து 'கற்க தபாடற' மற்றும் 'முருங்கைக்காய் சிப்ஸ்' என்ற படங்களில் நடித்தாலும், அவருக்கு பெரிதாக வெற்றி கிடைக்கவில்லை.
இதற்கிடையில், இயக்குனர் வெற்றி சுகுமாரன் இயக்கத்தில் 'ராவண கோட்டம்' என்ற திரைப்படத்தில் அவர் நடித்துள்ளார்.
அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் நடைபெறுவதாக அமைந்துள்ளது.
இந்த படம், நாளை (மே 12.,) திரைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்ட வேளையில், இந்த படத்திற்கு தடை கோரி, நாடார் சமூகத்தின் தலைவர் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
'ராவண கூட்டம்' சாதி பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் இருப்பதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
ராவண கோட்டம் திரைப்படத்திற்கு தடை?
ராவண கோட்டத் திரைப்படத்திற்கு தடை?#MuthuRamesh | #ravanakottam | #Malaimurasu | pic.twitter.com/l053VQFyht
— Malaimurasu TV (@MalaimurasuTv) May 10, 2023