Page Loader
'இயக்குனர்' மனோஜ்குமார் பாரதிராஜாவின் படத்தின் டைட்டிலை வெளியிட்ட மிஸ்கின்
மனோஜ்குமார் பாரதிராஜாவின் புதிய படத்தின் டைட்டில்

'இயக்குனர்' மனோஜ்குமார் பாரதிராஜாவின் படத்தின் டைட்டிலை வெளியிட்ட மிஸ்கின்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 01, 2023
05:30 pm

செய்தி முன்னோட்டம்

ஏற்கனவே தெரிவித்திருந்தது போல, இயக்குனர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தின் மூலம், மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகம் ஆகிறார். அந்த படத்தில், அவரது தந்தையான இயக்குனர் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின், தலைப்பு சமீபத்தில் வெளியாகியுள்ளது. திரைப்பட இயக்குனரான மிஸ்கின் இதை வெளியிட்டார். 'மார்கழி திங்கள்' என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தின் படப்பிடிப்பு, ஏப்ரல் மாதம் துவங்கும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த திரைப்படத்தில், வினோத் கிஷன் மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிப்பதாகவும் அறியப்படுகிறது. படத்திற்கு இசை, ஜிவி பிரகாஷ் குமார், பாடலாசிரியர், கபிலன் வைரமுத்து. இந்த வருட இறுதியில் இத்திரைப்படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

டைட்டில் வெளியிட்ட மிஸ்கின்