
விஜயின் வாரிசு பற்றி கருத்து தெரிவித்த ஒரு முஸ்லீம் பெண்ணிற்கு வலுக்கும் சிக்கல்
செய்தி முன்னோட்டம்
இரு தினங்களுக்கு முன் வெளியான விஜயின் வாரிசு படத்தை, முதல் நாள் முதல் ஷோ காண வந்த ஒரு முஸ்லீம் பெண்மணி, படத்தை கண்டபிறகு, தனது ஆதரவை விஜய்க்கு தெரிவித்து, தற்போது சிக்கலில் சிக்கியுள்ளார்.
இது குறித்து செய்தி வெளியான செய்தியில், அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனதை அடுத்து, அப்பெண்மணிக்கு சிலர் கண்டனம் தெரிவித்ததாக கூறியுள்ளது.
தன்னுடைய கருத்துக்கு கண்டனம் வலுப்பதையறிந்த அப்பெண்மணி, சமூக வலைத்தளத்தில் மன்னிப்பு கோரியுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இந்நிகழ்விற்கு கண்டனம் தெரிவித்துள்ள, இயக்குனர்-நடிகர் நவீன், ஒரு பெண்ணின் கருத்துக்காக, அவரை மன்னிப்பு கேட்கும்படி கட்டாயப்படுத்தும் சமூகத்தை சாடியுள்ளார்.
மேலும் சமூகத்தில் பெண்களுக்கும், ஆண்களுக்கும் இடையில் நிலவும் பாரபட்சத்தை கோடிட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
இயக்குனர்-நடிகர் நவீன் கண்டனம்
இஸ்லாமிய ஆண்கள் சினிமா பார்த்து மைக் பிடித்து பேசிவிட்டு மன்னிப்பு கேட்டதுண்டா? விஜய்காக நாங்க நிற்போம் என்று சொன்ன பெண்ணை, தனக்கக கூட நிறக முடியாத இடத்தில் வைத்திருக்கும் ஆணாதிக்கம் இஸ்லாமியர்களிடமிருந்து ஒழிய வேண்டும்.
— DirectorNaveen (@NaveenFilmmaker) January 12, 2023
pic.twitter.com/sYofBTgv5Y