LOADING...
நடிகை த்ரிஷா, தோழிகளுடன் விஜய்யின் வாரிசு படத்தை தியேட்டரில் பார்க்கும் வீடியோ வைரல்
தோழிகளுடன் விஜயின் வாரிசு படத்தை காண வந்த திரிஷா

நடிகை த்ரிஷா, தோழிகளுடன் விஜய்யின் வாரிசு படத்தை தியேட்டரில் பார்க்கும் வீடியோ வைரல்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 13, 2023
05:50 pm

செய்தி முன்னோட்டம்

பொங்கல் வரவான விஜயின் வாரிசு திரைப்படம், இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது. படத்தின் முதல் காட்சி, காலை 4 மணிக்கு, திரையிடப்பட்டது. விஜய், முதல் முறையாக தெலுங்கு இயக்குனர் வம்சி பைடபள்ளியுடன் இணைந்துள்ள இந்த படம், தமிழ், தெலுங்கு என்று இரு மொழிகளிலும் ஒரு சேர எடுக்கப்பட்டது. தமன் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தின் பாடல்கள், ஏற்கனவே ஹிட் அடித்துள்ளன. இந்த படத்தை காண, நடிகை திரிஷா தனது தோழிகளுடன் வந்திருந்த வீடியோ, தற்போது வைரல் ஆகி வருகிறது. ஊடக செய்திகளின் படி, திரிஷா சென்னையிலுள்ள திரையரங்கில் படத்தை காண சென்றதாகவும், ரசிகர்கள் கோஷமிட்டதால், பாதியிலே திரையரங்கை விட்டு வெளியேற நேர்ந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. தான், தோழிகளுடன் படத்தை காண போவதாக, ஏற்கனவே திரிஷா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

ட்விட்டர் அஞ்சல்

தோழிகளுடன் விஜயின் வாரிசு படத்தை காண வந்த திரிஷா